'வாழைப்பழ ஜூஸ் குடிச்சிட்டே...' குரங்கு 'அத' கரெக்ட்டா பண்ணிடுச்சு...! - வியப்பில் ஆழ்த்திய எலன் மஸ்க் நிறுவனம்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

எலான் மஸ்க்கின் மனித மூளை மற்றும் இயந்திர செயல்களை இணைக்கும் புதிய சோதனை வெற்றிகரமாக முடிவடைந்து உலகையே திரும்பிபார்க்க செய்துள்ளது.

உலக பணக்காரர்களில் முதலாக இருக்கும் எலான் மஸ்க், அதிநவீன மின்சார கார்களை தயாரிக்கும் டெஸ்லா, செயற்கைக்கோள்களை இலக்கிற்கு அனுப்பி விட்டு பூமிக்கு திரும்பும் ராக்கெட்டுகளை தயாரிக்கும் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற புதுமையான நிறுவனங்களுக்கு சொந்தக்கார். அதுமட்டுமில்லாமல் அவரின் மற்றொரு நிறுவனம் நியூராலிங்க்.

இந்த  நிறுவனம் மனித மூளையில் சிப் பொருத்தி அதன் மூலம் மனிதனையும் இயந்திரங்களையும் இணைக்கும் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு குரங்கின் மூளையில் சிப் பொருத்தி அதன் மூளையின் என்ன ஓட்டங்களையும், அந்த குரங்கின் செயல்முறைகளையும் பரிசோதத்தன.

பேஜர் என்ற அந்த குரங்கு ஒன்று வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்த குரங்கின் மூளையில் நியூராலிங்க் நிறுவனம் தயாரித்த சிப் பொருத்தப்பட்டுள்ளது.

நியூராலிங்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், பேஜர் என்ற அந்த குரங்கு வீடியோ கேம் விளையாடி கொண்டிருக்கிறது. அந்த வீடியோ கேமில் வரும் பந்தை ஆரஞ்சு நிறப் பெட்டிக்குள் ஒவ்வொரு முறை சேர்க்கும்போதும் குரங்கிற்கு ஒரு குழாய் மூலம் வாழைப்பழக் கூழ் கொடுக்கப்படுகிறது.

அதை சாப்பிட்டு கொண்டே அந்த குரங்கும் ஜாய்ஸ்டிக்கை அசைத்து, பந்தை சரியாக ஆரஞ்சுப் பெட்டியில் சேர்க்கும் போது குரங்கின் மூளையில் உருவாகும் அலைகள், சிப் மூலமாக கணிணிக்கு கடத்தப்படுகின்றன.

அந்த நிகழ்வின் போது, ஜாய் ஸ்டிக்கை அசைக்க குரங்கின் மூளை இட்ட கட்டளையை ஒரு கணிணி ப்ரோகிராமாக மாற்றி சிப்பில் பதிய வைக்கின்றனர் விஞ்ஞானிகள். இப்போது ஜாய் ஸ்டிக்கை அசைக்க வேண்டும் என்று குரங்கு நினைத்தவுடன் ஜாய் ஸ்டிக் இல்லாமலே வீடியோ கேம் விளையாட்டு வேகமாக நடக்கிறது.

குரங்கின் மூளை இட்ட கட்டளை வயர்லெஸ் தொடர்பு மூலமாக நேரடியாக கணிணிக்கு கடத்தப்படுவதால் விளையாட்டு விறுவிறுப்பாக நடக்கிறது. இதனால் நம் மனித குலத்திற்கு என்ன லாபம் என்பதையும் எலான் மஸ்க் விவரிக்கிறார்.

அதாவது, மனிதனின் மூளையில் சிப் ஒன்றைப் பொருத்தி அதன் மூலம் மனிதனையும் இயந்திரங்களையும் இணைக்கலாம்.

அதன்மூலம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மூளையில் இந்த சிப்பை பொருத்தி விட்டால் அவர் நினைத்தவுடன் ஸ்மார்ட்ஃபோனை இயக்க வைக்க முடியும் என கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல் செயற்கை கைகள் பொருத்தப்பட்ட ஒருவரின் மூளையுடன் அவரது கையை இணைத்து விட்டால் மூளை சொல்லும் கட்டளைக்கு ஏற்ப கை தானாக இயங்கும்.

இவை எல்லாத்தையும் அதாவது மனித நினைவுகளை காப்பி எடுத்து வைத்துக் கொண்டு முன்னும் பின்னும் ஓட்டிப் பார்க்கவும் முடியும் என்றெல்லாம் சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார்கள் நியூராலிங்க் குழுவினர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்