"இனி எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது".. பெண்ணாக மாறிய எலான் மஸ்கின் மகன் கொடுத்த மனு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

எலான் மஸ்கின் மகன் ஒருவர் பெண்ணாக மாறிவிட்டதாகவும், தன்னுடைய பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றிக்கொள்ள இருப்பதாகவும் மனு ஒன்றை அளித்துள்ளார்.

"இனி எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது".. பெண்ணாக மாறிய எலான் மஸ்கின் மகன் கொடுத்த மனு..!
Advertising
>
Advertising

Also Read | சொல்ல சொல்ல கேக்காம மனைவியுடன் Chat செய்த நண்பன்.. கோபத்துல கணவர் செஞ்ச காரியம்..!

எலான் மஸ்க்

அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். பின்னர் அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்க இருப்பதாக அறிவித்திருந்த வேளையில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அந்த நிறுவனத்தை முழுவதுமாக வாங்க முன்வந்தார் மஸ்க்.

திருமணம்

ஜஸ்டின் வில்சன் மற்றும் எலான் மஸ்க் 2000 இல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியின் முதல் மகன் நெவாடா 2002 இல் பிறந்தார். இருப்பினும் அடுத்த 10 மாதங்களில் நெவாடா மரணமடையவே இருவரும் கலங்கிப்போயினர். அதன்பிறகு 2004 ஆம் ஆண்டு மீண்டும் இரட்டை குழந்தைகளை (விவியன் மற்றும் கிரிஃபின்) பெற்றெடுத்தார் வில்சன். எலான் மஸ்கின் 7 குழந்தைகளில் இவர்களே மூத்தவர்கள் ஆகும். சில ஆண்டுகளில் இந்த தம்பதி விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றது. அதனை அடுத்து 2008 ஆம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்.

இந்நிலையில், இந்த தம்பதியின் மகன் விவியன் தனது கடைசி பெயரான சேவியர் அலெக்சாண்டர் மஸ்க் என்பதை மாற்ற இருப்பதாக அறிவித்துள்ளார். பெண்ணாக அடையாளப்படுத்தப்படும் விதமாக தனது பெயரை மாற்றிக்கொள்ள இருப்பதாக தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

பெயர் மாற்றம்

ஏப்ரல் மாதம் தனது 18வது பிறந்த நாளுக்கு ஒரு நாள் கழித்து தனது பெயரை விவியன் ஜென்னா வில்சன் என மாற்ற LA கவுண்டியில் ஆவணங்களை தாக்கல் செய்திருக்கிறார் அவர். மேலும், பெயர் மாற்றத்திற்கான காரணமாக பாலின அடையாளத்தை குறிப்பிட்டுள்ள அவர் "நான் இனி எந்த வகையிலும், எனது உயிரியல் தந்தையுடன் வாழ விரும்பவில்லை அல்லது அவருடன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மஸ்கின் கடைசி பெயரை விடுத்து, தனது தாயின் கடைசி பெயரான வில்சன் என்பதை இணைத்துக்கொள்ள விருப்பப்படுவதாக தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

Also Read | "கட்டுனா 2 பேரையும் தான் கட்டிப்பேன்".. ஒத்தைக்காலில் நின்ன மாப்பிள்ளை.. காத்துவாக்குல ரெண்டு காதலையும் கைப்பற்றிய பலே காதலன்..!

ELON MUSK, ELON MUSK TRANSGENDER DAUGHTER, PETITION, எலான் மஸ்க்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்