எலான் மஸ்க்கின் Tweet-ல் இருந்த வார்த்தை.. உலகமே அத பத்திதான் பேசிட்டு இருக்கு... குஷியில் நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் போட்ட ட்வீட் பற்றித்தான் தற்போது உலகமே பரபரப்புடன் பேசிவருகிறது.

Advertising
>
Advertising

Also Read | துபாயில் திறக்கப்பட்ட இந்து கோவில்.. வீடியோ பாத்துட்டு ஆனந்த் மஹிந்திரா சொன்ன விஷயம்.. வைரல்!!

எலான் மஸ்க்

அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 அமெரிக்க டாலர் கொடுத்து வாங்க தயார் என்றும் மொத்த விற்பனை தொகையையும் பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருந்தார். 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார் மஸ்க்.

வழக்கு

ட்விட்டர் நிறுவனம் கைமாறும் பணிகள் நடைபெறுவதாக சொல்லப்பட்டுவந்த நிலையில்  ட்விட்டர் தளத்தில் போலி கணக்குகள் மற்றும் ஸ்பாம்கள் அதிகமாக இருப்பதாகவும் இதுகுறித்த தகவல்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை என்றும் கூறிய மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை நிரந்தரமாக கைவிடுவதாக அறிவித்திருந்தார். இதனை எதிர்த்து ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்னும் சில வாரங்களில் துவங்க இருந்தது.

இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும், இதுதொடர்பாக கடிதம் ஒன்று ட்விட்டர் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதை நிரூபிக்கும் வகையில், மஸ்க் தரப்பின் கடிதம் தங்களுக்கு கிடைத்ததாகவும், ஒரு பங்குக்கு $54.20 என்ற பரிவர்த்தனையை முடிப்பதே தங்களுடைய நோக்கம் எனவும் ட்விட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது.

மஸ்க்கின் பிளான்

இந்நிலையில், எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் புது அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்குவது பற்றி சூசகமாக பதிவிட்டிருக்கிறார். இதுதான் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ட்வீட்டில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவது "everything app" -ஐ உருவாக்குவதற்கான வரைவு எனக் குறிப்பிட்டுள்ளார் மஸ்க். இந்நிலையில் everything app என்பது என்னவாக இருக்கும் என அனுமானங்கள் வரத் துவங்கியிருக்கின்றன.

முன்னதாக, "சீனாவில் பயன்படுத்தப்பட்டுவரும் WeChat போன்ற அப்ளிகேஷன்கள் பிற நாடுகளில் இல்லை" என ட்விட்டர் ஊழியர்களுடனான உரையாடலில் மஸ்க் தெரிவித்திருந்ததை நிபுணர்கள் மேற்கோள்காட்டி அதுபோன்ற அப்ளிகேஷனை உருவாக்க மஸ்க் திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துவருகிறார்கள். மெசேஜ், பணப்பரிவர்த்தனை, சோசியல் நெட்ஒர்க்கிங், வாடகை கார்களை புக் செய்வது, இணையவழி வர்த்தகம் ஆகியவற்றை ஒரே அப்ளிகேஷன் மூலம் மஸ்க் சாத்தியமாக்க நினைப்பதாகவும் நிபுணர்கள் ஆருடம் கூறிவருகின்றனர். எதையும் சர்ப்ரைசாகவே வெளியிடும் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்திருந்த நிலையில் போட்ட இந்த ட்வீட் உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | தமிழக ராணுவ வீரருடன்.. தமிழில் பேசிய அருணாச்சல பிரதேச மருத்துவர்... "அடேங்கப்பா, பக்காவா பேசுறாரே".. இணையத்தை கலக்கும் வீடியோ!!

ELON MUSK, APP, THINKING, ELON MUSK TWEET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்