'மன்னிச்சிடுங்க...' தவறுதலா 'அப்படி' நடந்துடுச்சு...! - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருந்த பெண்ணை 'கலாய்த்த' எலான் மஸ்க்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

எலான் மஸ்க் தன்னை பின்தொடர்வதற்கு நன்றி தெரிவித்த பெண்ணுக்கு கிண்டல் செய்யும் விதமாக ரிப்ளை செய்துள்ளார்.

'மன்னிச்சிடுங்க...' தவறுதலா 'அப்படி' நடந்துடுச்சு...! - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருந்த பெண்ணை 'கலாய்த்த' எலான் மஸ்க்...!

ட்விட்டரில் தற்போது அனைவரையும் அடிக்கடி திரும்பி பார்க்க வைத்து வருகிறார் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் தலைவர் எலான் மஸ்க்.

எலட்ரானிக் பொருள் மீது ஈர்ப்புள்ளவர்கள் அனைவருக்கும் ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்பவர் எலான் மஸ்க். இவரின் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.

Elon Musk replies in a teasing woman thank following her

டிவிட்டர் தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் எலான் மஸ்க் ப்ளூ டிக் இருக்கும் பிரபலமானவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து தரப்பினருடன் சில நேரங்களில் ரிப்ளை செய்வார்.

அதேப்போன்று, ட்விட்டரில் ரெபெக்கா எனும் பெண்ணும் டிவிட்டர் பக்கத்தில் தன்னை எலான் மஸ்க் பின்தொடர்வதைக் கவனித்துள்ளார்.

சந்தோஷத்தில் தலைகால் புரியாத ரெபெக்கா, எலான் மஸ்க்கைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்து பதிவிட்ட அவர் எலான் மஸ்க் தன்னை பின் தொடர்வதால் நான் பெருமையடைகிறேன் எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால், இதற்கு எலான் மஸ்க்கோ ஒருவித சர்காஸ்டிக்காக பதிலளித்த விதம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

எலான் மஸ்க் 'மன்னிக்கவும், தவறுதலாக நடந்துவிட்டது' என அவரின் ரிப்ளையில் குறிப்பிட்டார். இந்த சம்பவம் இணையத்தளத்தில் தற்போது டிரென்டிங் ஆகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்