செவ்வாய் கிரகத்துல வசிக்க இருக்கும் எலான் மஸ்க்கின் குழந்தைகள்?.. தொழிலதிபரின் கேள்விக்கு மஸ்க் சொன்ன பதில்.. திகைச்சுப்போன நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் அளித்த பதில் பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | "ஹய்யா.. Salary ஏத்திட்டாங்க".. இளம்பெண் போட்ட வீடியோ .. அப்போ பாத்து வந்த E-mail.. நொடியில் மாறிய வாழ்க்கை..!

எலான் மஸ்க்

அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். பின்னர் அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்க இருப்பதாக அறிவித்திருந்த வேளையில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அந்த நிறுவனத்தை முழுவதுமாக வாங்க முன்வந்தார் மஸ்க்.

குழந்தைகள்

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், மஸ்க்கிற்கும் அவரது நியூராலிங்க் நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பரில் இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த குழந்தைகளுக்கு பெயர் வைக்க ஆவணங்களை இந்த தம்பதி, சமர்ப்பிக்கப்போய் இந்த விபரம் வெளியே வந்திருப்பதாக தெரிகிறது. இந்த இரட்டையர்களையும் சேர்த்து எலான் மஸ்க்கிற்கு மொத்தம் 9 குழந்தைகள் உள்ளன. எலாஸ் மஸ்க் தனது முதல் மனைவி ஜஸ்டின் வில்சன் மூலம் ஐந்து குழந்தைகளை பெற்றுள்ளார். பின்னர் கனடாவின் பாடகர் கிரிமிஸ் மூலம் இரு குழந்தைகளை பெற்றுள்ளார்.

கேள்வி

இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த தொழில்முனைவோரான மார்க் கியூபன், எலான் எலான் மஸ்க்கிடம் வித்தியாசமான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அப்போது,"வாழ்த்துக்கள். எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளீர்கள்?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்திருக்கும் மஸ்க்,"செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் தேவை" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.

முன்னதாக, உலக அளவில் மக்கள்தொகை பெருக்கம் குறைந்துவருவதை மஸ்க் சுட்டிக்காட்டி இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என எச்சரித்திருந்தார். மேலும், தனது நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்க இருப்பதாகவும், இதற்காக பிரத்யேக திட்டம் அமலுக்கு வர இருப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | "என் 2 பொண்டாட்டி'ங்க Election'ல ஜெயிச்சுட்டாங்க.." உச்ச மகிழ்ச்சியில் கணவர்.. "3-வது மனைவியும் இருக்காங்க..."

ELON MUSK, KIDS, ELON MUSK KIDS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்