மனுஷன் கரெக்ட்டா தான் சொல்லியிருக்காரு.. வெஸ்டர்ன் டாய்லெட்டை பற்றி எலான் மஸ்க் போட்ட மீம்.. டிவிட்டரில் டிரெண்டிங்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் எப்போதும் சமூகவலைத்தள பக்கமான டிவீட்டரில் ஆக்ட்டிவாக இருப்பார். அவர் போடும் டிவீட்டர் பல காமெடியாக இருந்தாலும் பல சர்ச்சையை கூட்டும் விதமாக அமையும். ஒரு சில நேரங்களில் அவர் போட்ட ட்வீட் சர்ச்சை ஆனதும் அதை நாசுக்காக டெலிட் செய்தும் விடுவார்.

Advertising
>
Advertising

ஜன்னல் இடுக்குகளில் ஒட்டப்பட்டிருந்த டேப்.. காற்று வெளிய போகக் கூடாது.. வீட்டுக்குள்ள இருந்த 4 பேர்.. குடும்பத்தோடு சாப்ட்வேர் என்ஜினீயர் எடுத்த சோக முடிவு

எலான் மஸ்க் ஷேர் செய்த மீம்:

இந்நிலையில் தற்போது எலான் மஸ்க் ஒரு மீம் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் 1992ஆம் ஆண்டு என குறிப்பிட்டு டெலிபோன் பூத் ஒரு புறமும், இன்னொரு பக்கத்தில் 2022ஆம் ஆண்டு என குறிப்பிட்டு  வெஸ்டர்ன் டாய்லட் புகைப்படத்தை நவீன டெலிபோன் பூத் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

டெலிபோன் பூத்:

அவர் ஷேர் செய்த இந்த மீம் புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது. ஏனென்றால் அன்றைய காலத்தில் போன் இல்லாத சமயத்தில் தேவைக்காக மட்டுமே நாம் டெலிபோன் பூத்தை பெரும்பாலும் உபயோகிப்போம். ஆனால், இன்றைய நவீன காலத்தில் நம்முடன் போன் வராத இடமே இல்லை.

இரத்த ஓட்டம் நிற்கும் வரை நான் டாய்லட்டில் தான் உள்ளேன்:

இதில் பலரும் பல சுவாரஸ்யமான கமெண்ட்களை போட்டு வருகின்றனர். அதில் ஒருவர், 'முன்பெல்லாம் டாய்லெட் போக 1 நிமிடமாக இருந்தது ஆனால், இப்போது என் செல்போன் வருகையால் என் காலுக்கு இரத்த ஓட்டம் நிற்கும் வரை நான் டாய்லட்டில் தான் உள்ளேன்' என குறிப்பிட்டுள்ளார்.

என்னுடைய ஆபீஸ்:

அதோடு 2022ஆம் ஆண்டின் டெலிபோன் பூத்தான டாய்லெட்டை 'தன் ஆபீஸ்' எனவும், மற்றொருவர் 'இப்போது நாங்கள் உண்மையான ஃபோன் பூத்தை கழிப்பறையாகப் பயன்படுத்துகிறோம்' எனவும், 'அதனால்தான் இந்த நாட்களில் தகவல்தொடர்பு சீர்குலைந்துள்ளது' என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

எலான் மஸ்க்க்கின் இந்த மீம் அனைத்து நாடுகளில் வாழும் மக்களுக்கும் புரியும் என பலரும் ஷேர் செய்து இதனை ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.

ஓட்டுக்கு கொடுத்த தங்க நாணயம்.. அடகுக் கடையில் தெரிய வந்த உண்மை.. வேட்பாளரின் கணவர் கூறிய தகவல்

ELON MUSK, MEME, TRENDING WORLDWIDE, எலான் மஸ்க், டெலிபோன் பூத்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்