ட்ரம்ப் மீதான ட்விட்டரின் தடை நீக்கம் பெறுமா? ”… அதிரடியாக அறிவித்த எலான் மஸ்க்
முகப்பு > செய்திகள் > உலகம்எலான் மஸ்க் சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் ட்ரம்ப் மீதான டிவிட்டர் தடை பற்றி பேசியுள்ளார்.
Also Read | “எனக்கு இப்படி எல்லாம் நடந்தே இல்ல… டக் அவுட் ஆகிவிட்டு சிரித்தது ஏன்?” …. கோலி சொன்ன கூல் பதில்!
ட்ரம்ப்பை தடை செய்த டிவிட்டர்…
அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்று அமெரிக்க அதிபரானார். சமூக வலைதளங்களில் கலவரத்தைத் தூண்டும் வகையில் அவதூறாகக் கருத்துகள் பதிவிட்டு வந்ததால் ட்விட்டர் நிறுவனம் டொனால்டு டிரம்பின் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கியது. அதேபோன்று ஃபேஸ்புக் மற்றும் கூகுளின் யூடியூபிலிருந்தும் அவரது கணக்குகள் முடக்கப்பட்டன. கூகுள் நிறுவனம் காலவரையற்ற தடை விதித்தது. ஃபேஸ்புக் நிறுவனம் இரண்டரை ஆண்டுகள் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. இந்த முடிவுகளுக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் ஒரு சேர எழுந்தன.
இதையடுத்து ட்ரம்ப் புதிதாக சமூக வலைதளம் ஒன்று தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. டிரம்ப் மீடியா அண்ட் டெக்னாலஜி க்ரூப் (Trump Media & Technology Group TMTG) என்ற நிறுவனம் சார்பில் ட்ரூத் சோஷியல் என்ற சமூக வலைத்தளத்தை தொடங்க உள்ளதாக அறிவித்திருந்தார் ட்ரம்ப். இந்நிலையில் இப்போது டிவிட்டரில் அவரின் நிரந்தர தடையை நீக்கத் தயாராக இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
டிவிட்டரை வாங்கிய எலான் மஸ்க்…
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். பின்னர் அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்க இருப்பதாக அறிவித்திருந்த வேளையில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அந்த நிறுவனத்தை முழுவதுமாக வாங்கியுள்ளார் மஸ்க். எலான் மஸ்க் கைக்கு டிவிட்டர் விரைவில் செல்ல உள்ள நிலையில் அதில் பல மாற்றங்களை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரம்ப் தடை பற்றி மஸ்க்…
சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட எலான் மஸ்க் ட்ரம்ப் மீதான டிவிட்டரின் நிரந்தர தடையை "தார்மீக ரீதியாக தவறான முடிவு" என்றும் முட்டாள்தனமான முடிவு என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் "நிரந்தர தடை முடிவு ஒரு தவறு என்று நினைக்கிறேன், ஏனெனில் இது நாட்டின் பெரும்பகுதியை அந்நியப்படுத்தியது மேலும் அது டொனால்ட் டிரம்ப் தரப்பை கருத்தைக் கேட்க முடியாத சூழலை உருவாக்கியுள்ளது. எனவே, எல்லோரும் விவாதிக்கக் கூடிய ஒரு இடத்தில் மோசமான முடிவாக அமைந்துள்ளது. என்னைக் கேட்டால் டிரம்ப் மீதான நிரந்தரத் தடையை நான் மாற்றுவேன் என்றே நினைக்கிறேன்." எனக் கூறியுள்ளார். மஸ்க்கின் இந்த முடிவு விவாதங்களை உருவாக்கியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "உங்களுக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா.. ட்விட்டரை நான் வச்சுக்கவா?" யூடியூப் பிரபலத்தின் கேள்விக்கு எலான் மஸ்க் கொடுத்த 'தெறி' பதில்..!
- "நரகத்துக்கு தான் போகணும்னாலும் எனக்கு ஓகே".. பரபரப்பை கிளப்பிய எலான் மஸ்க்.. பத்திகிட்ட டிவிட்டர்..!
- "உண்மையாவே தாஜ்மஹால் உலக அதிசயம் தான்".. எலான் மஸ்க் போட்ட ட்வீட்.. இந்திய தொழிலதிபர் வச்ச வேற லெவல் கோரிக்கை..!
- "நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்".. எலான் மஸ்க்-கிட்டயே டீல் பேசிய 19 வயசு பையன்.. மஸ்க் போட்ட மாஸ்டர் பிளான்..!
- “சாதாரண பயனர்களுக்கு டுவிட்டர் இலவசம்தான், ஆனால்...!” திடீரென ‘ட்விஸ்ட்’ வச்ச எலான் மஸ்க்..!
- 2022 எப்படி இருந்துச்சு..? ஒத்த மீம்-ல எலான் மஸ்க் செஞ்ச பங்கம்.. பத்திக்கிட்ட டிவிட்டர்..!
- இது நம்ம லிஸ்டுலேயே இல்லையே.. மஸ்க் மார்க் வச்ச அடுத்த கம்பெனி.. பரபரப்பை கிளப்பிய ட்வீட்..
- டுவிட்டர் ஓனராக எலான் மஸ்க் பதிவிட்ட ‘முதல்’ ட்வீட்.. என்ன சொல்லியிருக்கார் தெரியுமா? ‘செம’ வைரல்..!
- இதுனால தான் டிவிட்டர வாங்குனாரா.. எலான் மஸ்க் போட்ட ட்வீட்.. பல சம்பவம் இருக்கு போலயே..!
- டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய மஸ்க்.. சோமோட்டோ, ஸ்விக்கி நிறுவனங்கள் போட்ட மாஸ் கமெண்ட்..!