வாசனை திரவிய தொழிலில் கால்பதித்த எலான் மஸ்க்.. விலையை கேட்டு ஷாக் ஆகிப்போன நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலக பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் வாசனை திரவிய தொழிலில் கால் பதித்திருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | நிறைய பணம் கிடைக்கணும்னு பூஜை.. நம்பி போன 2 பெண்களுக்கு நடந்த விபரீதம்.. விசாரணையில் போலீசுக்கு வந்த சந்தேகம்..!

எலான் மஸ்க்

அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். சிறுவயது முதலே அறிவியல் பாடங்களில் தீராத காதலுடன் இருந்த மஸ்க், படிப்படியாக தனது வாழ்க்கையில் முன்னேறியவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த விஷயங்களில் ஆர்வம்கொண்ட இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார்.

செவ்வாய் கிரக ஆராய்ச்சி, உலக மக்களுக்கு குறைவான கட்டணத்தில் இணைய சேவை வழங்கிடும் ஸ்டார்லிங் திட்டம் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு முக்கிய திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல, இவருடைய டெஸ்லா நிறுவனம் உலகின் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முதன்மை நிறுவனமாக விளங்குகிறது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

வாசனை திரவியம்

இந்நிலையில் 'Burnt Hair' எனும் பெயரில் வாசனை திரவிய தயாரிப்பு தொழிலில் இறங்கியுள்ளார் மஸ்க். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"என்னுடையது போன்ற பெயருடன், வாசனைத் தொழிலில் இறங்குவது தவிர்க்க முடியாதது - நான் ஏன் இவ்வளவு காலம் போராடினேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வாசனை திரவியம் அறிமுகமான சில நிமிடங்களிலேயே 10 ஆயிரம் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ட்விட்டர் பக்கத்தில் தனது பயோவை வாசனை 'திரவிய விற்பனையாளர்' (Perfume Salesman) என மாற்றியிருக்கிறார் மஸ்க். மேலும், இந்த வாசனை திரவியத்தை கிரிப்டோ கரன்சிகள் மூலமாகவும் வாங்கலாம் என அறிவித்திருக்கிறார்.

விலை

இந்த வாசனை திரவியத்தை ட்விட்டரில் அறிமுகப்படுத்திய மஸ்க், "பூமியின் சிறந்த வாசனை" எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த Burnt Hair வாசனை திரவியத்தின் விலை ஒரு பாட்டிலுக்கு 100 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 8,400 ரூபாய்) என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | Webcam ஆன் செய்யாத ஊழியரை வேலையைவிட்டு தூக்கிய நிறுவனம்... நீதிமன்றம் போட்ட Fine-ஐ பார்த்துட்டு திக்குமுக்காடிப்போன ஊழியர்..!

ELON MUSK, PERFUME, LINE BURNT HAIR, ELON MUSK LAUNCHES PERFUME

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்