"ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்துட்டா".. பரபரப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் டிவிட்.. என்ன ஆச்சு?
முகப்பு > செய்திகள் > உலகம்உலக பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் போட்டுள்ள டிவிட் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
எலான் மஸ்க்
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். பின்னர் அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்க இருப்பதாக அறிவித்திருந்த வேளையில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அந்த நிறுவனத்தை முழுவதுமாக வாங்கியுள்ளார் மஸ்க்.
உக்ரைனுக்கு ஸ்டார்லிங் உதவி
ரஷ்யா தங்களது இணைய சேவையை தாக்கி வருவதன் காரணமாக, ஸ்டார்லிங் திட்டத்தின் மூலமாக இணைய சேவையை வழங்கும்படி உக்ரைன் அரசு எலான் மஸ்கிடம் கோரிக்கை வைத்திருந்தது. இதனையடுத்து உக்ரைனுக்கு ஸ்டார்லிங் சேவையை அளிப்பதாக அறிவித்தார் மஸ்க். இந்நிலையில், ரஷ்யாவை சேர்ந்த ரோஸ்கோஸ்மோஸ் அமைப்பின் இயக்குனர் டிமிட்ரி ஒலெகோவிச் ரோகோசின், ரஷ்ய ஊடகங்களுக்கு அளித்த அறிக்கை என ஒரு பதிவையும் மஸ்க் பகிர்ந்திருந்தார்.
அதில், "தங்களிடம் சிக்கிய 36 வது உக்ரைனிய கடற்படை பிரிவு, கர்னல் டிமிட்ரி கோர்மியான்கோவ் தெரிவித்ததன் அடிப்படையில் மஸ்க்கின் ஸ்டார்லிங் திட்டத்தின் மூலமாக மரியுபோலில் உள்ள உக்ரேனிய துருப்புக்களுக்கு இணைய இணைப்பை வழங்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. நாஜி அசோவ் பட்டாலியனின் போராளிகளுக்கும் மரியுபோலில் உள்ள உக்ரேனிய கடற்படையினருக்கும் பென்டகன் உதவியுடன் ஸ்டார்லிங் டெர்மினல்கள் ஹெலிகாப்டர் மூலமாக வழங்கப்படுவது தெரியவந்திருக்கிறது. இதற்கான முழு பொறுப்பையும் எலான் மஸ்க் ஏற்கவேண்டியிருக்கும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு பதில் அளித்திருந்த மஸ்க், "நாஜி என்ற வார்த்தைக்கு அவர் குறிப்பிட்டது அர்த்தமில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்.
பரபரப்பை கிளப்பிய டிவிட்
இந்நிலையில் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில்," ஒருவேளை நான் மர்மமான முறையில் இறந்துவிட்டால், உங்களை அறிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த டிவிட் சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அடுத்த டைம் பாஸ்வேர்டு மாத்தும்போது எலான் மஸ்க்கை நெனெச்சுக்கங்க.. காவல்துறை போட்ட ட்வீட்... ஓஹோ இதுதான் விஷயமா?
- “அவரை குறைச்சு மதிப்பிடக் கூடாது”.. எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியது பற்றி பில் கேட்ஸ் பரபரப்பு கருத்து..!
- "நான் ஒன்னும் ஆண்ட்ராய்ட் இல்ல..எனக்கும் உணர்ச்சிகள் இருக்கு".. எலான் மஸ்க் சோகத்தோட சொன்ன விஷயம்.. என்ன ஆச்சு?
- ‘இதுதான்யா உண்மையான காதல்’.. காதலிக்கு நடந்த மோசமான விபத்து.. நெட்டிசன்களை உருக வைத்த வீடியோ..!
- "நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்".. எலான் மஸ்க்-கிட்டயே டீல் பேசிய 19 வயசு பையன்.. மஸ்க் போட்ட மாஸ்டர் பிளான்..!
- “சாதாரண பயனர்களுக்கு டுவிட்டர் இலவசம்தான், ஆனால்...!” திடீரென ‘ட்விஸ்ட்’ வச்ச எலான் மஸ்க்..!
- "14 வயசுலயே அந்த கம்பெனி ஷேர் -அ வாங்க சொன்ன".. எலான் மஸ்கின் அம்மா பகிர்ந்த தகவல்.. மனுஷன் அப்போவே அப்படித்தான் போலயே..!
- உக்ரைனுக்கு வந்த ஐ.நா. தலைவர்.. திடீரென ரஷ்யா செய்த அதிர்ச்சி காரியம்.. அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம்..!
- எல்லாரும் நினைக்கிறமாதிரி ரஷ்யா கருங்கடல்ல போர் கப்பலை மட்டும் நிறுத்தல.. வேற ஒன்னும் செஞ்சிட்டு இருக்காங்க.. குண்டைத் தூக்கிப்போட்ட அமெரிக்கா !
- ‘முதல்ல Twitter.. அடுத்து இந்த கம்பெனியா..!’.. உலகின் மிக ‘பிரபல’ நிறுவனத்தின் மீது கண் வைத்த எலான் மஸ்க்.. எதிர்பார்ப்பை எகிர வைத்த ‘ஒற்றை’ ட்வீட்..!