"உக்காந்து இருக்குற தினுச வெச்சே".. ட்விட்டரின் புதிய சிஇஓ -வை அறிவித்து Fun செய்த எலான் மஸ்க்.. வைரல் ட்வீட்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளராகவும் இருக்கும் சூழலில், சமீபத்தில் ட்விட்டர் தளத்தையும் வாங்கி இருந்தார். ட்விட்டர் தளத்தை எலான் மஸ்க் வாங்குவதற்கு முன்பாகவே அதை சுற்றி பல்வேறு பரபரப்பான விஷயங்கள் அரங்கேறி வந்தது.

                                    Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

தொடர்ந்து ட்விட்டரை வாங்கிய பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இருந்தார் எலான் மஸ்க். இதன் பின்னர், தனது ட்விட்டர் பக்கத்தில் நாள்தோறும் ஏராளமான மீம்ஸ்களையும், தன் மனதில் படும் வேடிக்கையான கருத்துக்களையும் பகிர்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார் எலான் மஸ்க்.

அதே போல, நெட்டிசன்கள் குறிப்பிடும் கமெண்ட்டுகளுக்கும் தனது கருத்தையும் அளிப்பார். இதனால், எந்த சமூக வலைத்தளத்தை திறந்தாலும் எலான் மஸ்க் பெயர் நிச்சயம் ட்ரெண்டிங்கில் தான் இருக்கும்.

ட்விட்டரை வாங்குவதற்கு முன்பாகவே ஆக்டிவாக இருந்து வந்த எலான், அதனை வாங்கிய பின்னர் இன்னும் ஆக்டிவாக இருந்து பல்வேறு கருத்துக்களையும் பதிவுகளையும் வெளியிட்டும் வருகிறார்.


Images are subject to © copyright to their respective owners

இதனிடையே ட்விட்டரின் புதிய தலைமை செயல் அதிகாரி யார் என்பதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வேடிக்கையாக எலான் மஸ்க் அறிவித்துள்ளது இணையவாசிகள் மத்தியில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.

ட்விட்டர் தளத்திற்கான சிஇஓ குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்று கூறி வரும் எலான் மஸ்க், ட்விட்டர் பக்கத்தில் புதிய சிஇஓ என தன்னுடைய வளர்ப்பு நாயின் புகைப்படத்தை எலான் மாஸ்க் பகிர்ந்துள்ளார்.

Image Credit : Elon Musk Twitter

அந்த நாய் ட்விட்டர் சிஇஓ இருக்கையில் அமர்ந்திருப்பது போன்ற படத்தை பகிர்ந்து, அது அணியப்பட்டுள்ள டி-ஷர்டிலும் சிஇஓ என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த நாய் அமர்ந்திருக்கும் மேசையில் சில ட்விட்டர் ஃபைல்கள் இருப்பது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது இணையவாசிகள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது.



Image Credit : Elon Musk Twitter

ELON MUSK, TWITTER CEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்