ரசிகர்களால் உருவாக்கப்பட்ட எலான் மஸ்க்கின் வித்தியாசமான சிலை.. இதுக்கு பின்னாடி இவ்வளவு அர்த்தம் இருக்கா.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகத்தின் டாப் பணக்காரரான எலான் மஸ்க்கின் சிலையை வித்தியாசமான முறையில் வடிவமைத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் டாப்பில் இருக்கிறார்.

முன்னதாக 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், போலி கணக்குகள் பற்றி தகவல்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிடவில்லை எனக்கூறி நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார் மஸ்க். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாக ட்விட்டர் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த சூழலில் ட்விட்டரை கைப்பற்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் மஸ்க்.

இதனிடையே மஸ்க்கின் ரசிகர்கள், வித்தியாசமான சிலையை வடிவமைத்திருக்கிறார்கள். 30 அடி நீளமும் 5 அடி 9 அங்குல உயரமும் கொண்ட இந்த சிலை முழுவதும் அலுமினியத்தால் செய்யப்பட்டிருக்கிறது. மஸ்க்கின் தலை போன்ற உருவத்துடன் ஆட்டின் (GOAT) உடலுடனும் செய்யப்பட்ட இந்த சிலை ராக்கெட்டின் மீது பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்த சிலையை உருவாக்க 6 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவானதாக தெரிகிறது. இந்த சிலையை கனடாவை சேர்ந்த உலோக சிற்பிகள் கெவின் மற்றும் மிச்செல் ஸ்டோன் உருவாக்கியுள்ளனர். ரசிகர்களால் GOAT (Greatest Of All Time) என்று கொண்டாடப்படும் மஸ்க்கிற்கு GOAT (ஆடு) வடிவிலேயே சிலை செய்திருப்பது நெட்டிசன்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சிலை உருவாக்கத்தை கிரிப்டோ கரன்சி அமைப்பான Elon GOAT Token கவனித்து வந்திருக்கிறது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில்,"நாங்கள் அதை ஒருபோதும் செய்ய மாட்டோம் என்று பெரும்பாலான மக்கள் நினைத்தார்கள், ஆனால் அதனை உருவாக்கி மஸ்க்கிடம் கொடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. நிஜமாகவே அவரை சந்தித்து இதனை கொடுக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் மிகவும் புதுமையான மனிதர். அவர் ஒரு GOAT" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சிலை வரும் நவம்பர் 26 ஆம் தேதி டெஸ்லா நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள ஆஸ்டினில் வைத்து மஸ்க்கிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. இதனிடையே இந்த வித்தியாசமான சிலையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

 

ELON MUSK, GOAT, MONUMENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்