இதுனால தான் டிவிட்டர வாங்குனாரா.. எலான் மஸ்க் போட்ட ட்வீட்.. பல சம்பவம் இருக்கு போலயே..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பேச்சு சுதந்திரம் குறித்து டிவிட் செய்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
Also Read | “வடகறியில் உப்பு அதிகமா இருக்கு”.. சமையல் மாஸ்டருக்கு நேர்ந்த சோகம்.. தலைமறைவான ஹோட்டல் மேனேஜர்..!
எலான் மஸ்க்
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். பின்னர் அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்க இருப்பதாக அறிவித்திருந்த வேளையில் நேற்று முன்தினம் அந்த நிறுவனத்தை முழுவதுமாக வாங்கியுள்ளார் மஸ்க்.
44 பில்லியன்
ட்விட்டர் நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 டாலர் கொடுத்து வாங்க தயார் என்றும் மொத்த விற்பனை தொகையையும் பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருந்தார். அதன்படி டிவிட்டரை சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியுள்ளார் எலான் மஸ்க்.
பேச்சு சுதந்திரம்
இந்நிலையில் பேச்சு சுதந்திரம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,"சுதந்திரமான பேச்சு என்பதை, நான் சட்டத்திற்குப் பொருந்துவதாக கருதுகிறேன். நான் சட்டத்திற்கு அப்பாற்பட்ட தணிக்கைக்கு எதிரானவன். மக்கள் பேச்சு சுதந்திரத்தை குறைக்க விரும்பினால், அதற்கான சட்டங்களை இயற்றுமாறு அரசிடம் கேட்பார்கள். எனவே, சட்டத்தை மீறுவது மக்களின் விருப்பத்திற்கு எதிரானது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி இருந்தாலும் அதன் நிர்வாகக் குழுவில் மஸ்க் இணைய மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியானது. அதன் பிறகு டிவிட்டர் நிறுவன தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில் எலான் மஸ்க் "உலகளவில் சுதந்திரமான பேச்சுக்கான தளமாக டிவிட்டர் இருக்கும் என நம்பிக்கை வைத்துதான் நான் முதலீடு செய்தேன். மேலும் பேச்சு சுதந்திரம் ஒரு சமூகத்தின் அடிப்படை உரிமை என நான் நம்புகிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு தற்போது மீண்டும் அதுகுறித்து மஸ்க் கருத்து தெரிவித்திருப்பது உலகம் முழுவதும் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ட்விட்டர் CEO பதவி விலகினாலும் அவருக்கு எலன் மஸ்க் இவ்ளோ கோடி கொடுக்க வேண்டி வருமா? வெளிவந்த தகவல்..!
- டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய மஸ்க்.. சோமோட்டோ, ஸ்விக்கி நிறுவனங்கள் போட்ட மாஸ் கமெண்ட்..!
- “இனி எந்த திசையில் செல்லும்னு தெரியாது”.. ஊழியர்களிடம் Twitter CEO சொன்ன பரபரப்பு தகவல்..!
- திடீரென வைரலாகும் Elon Musk 5 வருச பழைய ட்வீட்.. அப்படியென்ன சொல்லி இருக்கார்..?
- ‘சொன்ன மாதிரியே செஞ்சிட்டாரு’.. Twitter நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க்.. விலை எவ்ளோன்னு கேட்டா ஆடிப்போயிருவீங்க..!
- "மிஸ்டர் மஸ்க்..இதான் எங்க ஊரு டெஸ்லா.. இதுக்கு எரிபொருள், கூகுள் Map கூட தேவையில்ல"..ஆனந்த் மஹிந்திராவின் தரமான செய்கை..
- "பேசாம இலங்கையை வாங்கிடுங்க.. சிலோன் மஸ்க்-னு பெயர் வச்சுக்கலாம்".. எலான் மஸ்க்கு அட்வைஸ் செஞ்ச இந்திய தொழிலதிபர்..!
- "ஒருவேளை டிவிட்டர் நிறுவனத்தை வாங்க முடியலைனா என்கிட்ட பிளான் B இருக்கு".. எலான் மஸ்கின் ஸ்மார்ட் மூவ்.. ஆட்டம் சூடு பிடிக்குது..!
- 'என்னோட Final Offer'.. மொத்த டிவிட்டர் நிறுவனத்தையும் வாங்கும் எலான் மஸ்க்?.. ஆத்தாடி இவ்வளவு கோடியா?
- அவங்க இல்லைன்னா என்ன நாங்க இருக்கோம்.. டிவிட்டர் சம்பவத்துக்கு பிறகு எலான் மஸ்க்-க்கு அழைப்பு விடுத்த இந்திய நிறுவனம்.. சம்பவம் இருக்கு போலயே..!