அவரு கூட எப்படிங்க கம்பேர் பண்ணுவீங்க? எலான் மஸ்க் ஷேர் செய்த மீம்.. வெடித்த சர்ச்சையால் உடனே டெலீட்
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்கா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை ஹிட்லருடன் ஒப்பிட்டு பதிவிட்ட சர்ச்சைக்குரிய ட்வீட்டை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் நீக்கியுள்ளார்.
கனடாவில் எல்லையை கடந்து அமெரிக்கா செல்லும் லாரி ஓட்டுநர்களும், அமெரிக்காவிலிருந்து கனடா திரும்பும் லாரி ஓட்டுநர்களும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று கனடா அரசு கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது.
ஜஸ்டின் ட்ரூடோ போட்ட உத்தரவு:
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் நாடு முழுவதும் பரவியது. போராட்டத்தை ஒடுக்கும் விதமாக கனடாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அடுத்த 30 நாட்களுக்கு இது அமலில் இருக்கு எனவும் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டார்.
சிறை மற்றும் அபராதம்:
இதன்மூலம் போராட்டக்காரர்களை சிறையில் அடைக்கவும் அவர்களுக்கு அபராதம் விதிக்கவும், நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்புகளை பாதுகாக்கவும் போலீஸாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபடுவோரின் வங்கிக் கணக்கை முடக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தயவுசெய்து ஜஸ்டின் ட்ரூடோவுடன் ஒப்பிடாதீர்கள்:
அந்த வகையில், லாரி ஓட்டுநர்களுக்கு ஆதரவாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை ஹிட்லருடன் ஒப்பிட்டு மீம் ஒன்றை எலான் மஸ்க் தனது ட்விட்டர் நேற்று பக்கத்தில் பதிவிட்டார். அதில், என்னை தயவுசெய்து ஜஸ்டின் ட்ரூடோவுடன் ஒப்பிடாதீர்கள் என்று ஹிட்லர் கூறுவது போல் இருந்தது.
நகைச்சுவை மற்றும் அப்பட்டமான மதிப்பீடுகளுக்கு எலான் மஸ்க் பெயர் பெற்றவர், ஆனால் லட்சக்கணக்கான யூதர்களின் இனப்படுகொலை மற்றும் இரண்டாம் உலகப் போருக்கு காரணமான நாஜித் தலைவர் ஹிட்லருடன் ஜஸ்டின் ட்ரூடோவை அவர் ஒப்பிட்டதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனம் குவிந்தது. இதனையடுத்து, சர்ச்சைக்குரிய அந்த ட்வீட்டை எலான் மஸ்க் டெலீட் செய்துள்ளார்.
யூதர்கள் கமிட்டி நன்றி:
ட்வீட்டை நீக்கிய அவருக்கு அமெரிக்க யூதர்கள் கமிட்டி நன்றி தெரிவித்துள்ளது. ஜனநாயக தலைவர்களை ஹிட்லருடன் ஒப்பிடுவது நாஜிகளால் கற்பனை செய்ய முடியாத துன்பங்களை அனுபவித்தவர்களை அவமதிப்பதாகும் என்றும் அமெரிக்க யூதர்கள் கமிட்டி கூறியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இவ்வளவு பிட்காயின் வச்சிருக்காரா? வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ தகவல்
- டெக்னாலஜியில் அசத்திய 19 வயது மாணவர்.. மிரண்டு போன எலான் மஸ்க்.. 5,000 டாலர் வாங்கிட்டு எனக்கு 'அத' பண்ணி கொடுங்க
- எரிச்சலா இருக்கு.. ட்விட்டர் வெளியிட்ட NFT ப்ரொஃபைல் பிக்சர்.. ஓப்பனா ட்வீட் செய்த எலான் மஸ்க்
- வெடித்த எரிமலை.. வெளியுலக தொடர்பில்லாமல் தவிக்கும் டோங்கோ தீவு.. உதவிக்கரம் நீட்டும் எலான் மஸ்க்
- தமிழ்நாட்டில் எலான் மஸ்க்-ன் டெஸ்லா? வாங்க.. வாங்க.. நம்ம பசங்கலாம் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க!
- டெஸ்லா காரை எப்போ 'இந்தியாவுக்கு' கொண்டு வரப்போறீங்க? எலான் மஸ்க் சொன்ன அதிருப்தி பதில்!
- ‘இடியட்ஸ்…!’- ‘குடிமக்களை’ வகைதொகை இல்லாமல் திட்டித் தீர்த்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ; என்ன காரணம்?
- இது லிஸ்ட்லயே இல்லையே..டெஸ்லா செல்போனை செவ்வாய் கிரகத்துக்கு கொண்டுபோய் யூஸ் பண்ணலாமாம்! அப்படி என்ன ஸ்பெஷல்
- கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்த 'அசோக் எல்லுசுவாமி' டெஸ்லா நிறுவனத்தின் இயக்குனரானது எப்படி? எலான் மஸ்க் பகிர்ந்த தகவல்
- கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? எலான் மஸ்க்கை தாறுமாறாக விளாசும் 'சீன' நெட்டிசன்கள், அப்படி என்ன தான் பண்ணினாரு?