'வேணா கைது பண்ணிக்கோங்க’... ‘ஊரடங்கு விதியை மீறி தொழிற்சாலையை திறந்த எலான்’...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஊரடங்கு உத்தரவை மீறி அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், ப்ரேமோண்ட் நகரில் இருக்கும் தனது டெஸ்லா கார் தொழிற்சாலையைத் திறந்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ள எலான் மஸ்க், "அலமேடா மாகாணத்தின் விதிகளை மீறி டெஸ்லா இன்று மீண்டும் உற்பத்தியை ஆரம்பிக்கிறது. அங்கு மற்றவர்களுடன் நானும் இருப்பேன். யாரை வேண்டுமானாலும் கைது செய்ய வேண்டுமென்றால் என்னை மட்டும் கைது செய்யுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தனது தொழிற்சாலை திறக்க அனுமதிக்கப்படவில்லை என்றால் நெவடா அல்லது டெக்சாஸுக்கு தனது தொழிற்சாலையை மாற்றிவிடுவேன் என்றும் மஸ்க் கூறியிருந்தார். மேலும், கடந்த வாரம் அலமேடா மாகாணத்தின் கொரோனா ஊரடங்கு விதிகளுக்கு எதிராக மஸ்க் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறி டெஸ்லா தொழிற்சாலையை தொடங்கிய எலான் நிறுவனத்தில் 30 சதவீதப் பணியாளர்களுடன் வேலை நடைபெற்று வருகிறது. இதற்கு ஆளுநர் கெவின் நியூஸம் அனுமதித்துள்ளதாக மஸ்க் கூறியுள்ளார். இவர் அங்குள்ள ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் சொந்தக்காரராகவும் உள்ளார். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்