"சண்டைக்கு தயாரா?"... ரஷ்ய அதிபர் புதினுடன் நேருக்கு நேர் சவால் .. வைரலாகும் எலான் மஸ்க் ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து உச்சமடைந்து வரும் நிலையில், உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சவால் விடுவதாக ட்வீட் செய்திருப்பது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

அந்த ‘ஆப்’ தாங்க என் உயிர்.. திடீர்னு இப்படி பண்ணிட்டாங்க.. கதறி அழுத ரஷ்ய செலிபிரிட்டி..!

மோசமான போர்

நேட்டோ அமைப்புடன் உக்ரைன் இணைவதை எதிர்த்து வந்த ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தது. இதனை அடுத்து சுமார் ஒன்றரை லட்சம் ரஷ்ய வீரர்கள் உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதலை துவங்கினர். இதன் காரணமாக உக்ரைன் நாட்டின் தகவல் தொழில் நுட்ப கட்டமைப்பு கடும் சேதமடைந்தது. இணைய வசதி துண்டிக்கப்பட்டதால் தங்களுக்கு உதவி செய்யும்படி எலான் மஸ்கிடம் கோரிக்கை வைத்தது உக்ரைன் அரசு.

ஸ்டார் லிங்க்

ஸ்பேஸ் எக்ஸ் என்னும் நிறுவனத்தை நடத்திவரும் எலான் மஸ்கின் கனவுத் திட்டம் தான் இந்த ஸ்டார் லிங்க். பூமியின் சுற்று வட்டப் பாதையில் சுமார் 2000 செயற்கை கோள்களை அனுப்பி அதன்மூலம், உலகம் முழுவதிலும் அதிவேக இணைய சேவையை வழங்குதல் இந்த திட்டத்தின் நோக்கம்.

இந்நிலையில், உக்ரைன் துணை அதிபர் இணைய வசதி வேண்டி கோரிக்கை வைத்ததை தொடர்ந்து ஸ்டார் லிங்க் சேவையை உக்ரைன் நாட்டிற்கு அளிப்பதாக எலான் மஸ்க் அறிவித்தார்.

சவால்

இந்நிலையில், நேற்று மஸ்க் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்," ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புதினுக்கு ஒற்றைப் போருக்கான சவாலை விடுக்கிறேன். உக்ரைன் ஆபத்தில் இருக்கிறது. இந்த சண்டைக்கு நீங்கள் தயாரா?" என குறிப்பிட்டு உள்ளார். ரஷ்ய மொழி மற்றும் ஆங்கிலத்தில் இந்த பதிவினை மஸ்க் வெளியிட்டு இருக்கிறார்.

கூகுள், மெட்டா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் ரஷ்யாவின் போர் முடிவிற்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்து வந்த நிலையில், உலக பணக்காரர்களில் ஒருவரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க் நேரடியாக ரஷ்ய அதிபர் புதினை "போர் செய்யத் தயாரா?" என சவால் விட்டு இருப்பது உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆறே நாளில் 6000 பெட் .. அவசர அவசரமாக மருத்துவமனை கட்டும் சீனா.. வேகமெடுக்கும் புதிய‌ வைரஸ் காரணமா..?

ELON MUSK, PUTIN, RUSSIA UKRIANE CRISIS, ரஷ்ய அதிபர், எலான் மஸ்க்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்