எரிச்சலா இருக்கு.. ட்விட்டர் வெளியிட்ட NFT ப்ரொஃபைல் பிக்சர்.. ஓப்பனா ட்வீட் செய்த எலான் மஸ்க்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ட்விட்டர் அதன் NFT வடிவிலான ப்ரொஃபைல் பிக்சர் படத்தை வெளியிட்டுள்ளது, ஆனால் அந்த படம் தனக்கு பிடிக்கவில்லை என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

ப்ரொஃபைல் படத்தை NFT-களாக மாற்றி ட்விட்டரில் பயன்படுத்த அனுமதி:

உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டர் அண்மையில்  அதன் பயனர்களுக்காக NFT அம்சங்களை வெளியிடத் தொடங்கியது. ஆரம்பத்தில் iOS மூலம் ட்விட்டர் ப்ளூ வாடிக்கையாளர்கள் தங்கள் ப்ரொஃபைல் படத்தை NFT-களாக மாற்றி ட்விட்டரில் பயன்படுத்த அனுமதி வழங்கியது. ட்விட்டரில் வழக்கமான வட்ட வடிவ காட்சிப் படத்திலிருந்து சமீபத்திய ப்ரொஃபைல் படம் சிறிது வித்தியாசமாகவே இருந்தது. அது ஒரு அறுகோண வடிவத்தில் உள்ளது.

NFT வடிவிலான ப்ரொஃபைல் பிக்சர் பிடிக்கவில்லை:

அதில் ட்விட்டர் ப்ளூ சந்தாதாரரான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்கிற்கு ட்விட்டரின் சமீபத்திய NFT வடிவிலான ப்ரொஃபைல் பிக்சர் பிடிக்கவில்லை என்பதை அவரின் ட்விட்டர் பக்கத்திலேயே வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க்கை எரிச்சல் அடைய செய்துள்ளது:

மேலும் ட்விட்டர் தனது புது முயற்சிகளை இப்படியான சாதாரண விஷயங்களுக்கு பயன்படுத்தி வீணடிப்பாதாகவும், ட்விட்டரின் புதிய அறுகோண வடிவிலான ப்ரொஃபைல் பார்க்கும் போது “எரிச்சலூட்டுவதாக” உள்ளது எனவும் அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, அவரின் கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

கிரிப்டோகரன்சிக்கான அடிப்படை தொழில்நுட்பம்:

ட்விட்டர் சில மாதங்களுக்கு முன் அதன் பயனர்கள் பிட்காயினை அனுப்பவும் பெறவும் அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்குப் பிறகு அதன் ட்விட்டர் ப்ளூ பயனாளர்கள் அவர்களின் ப்ரொஃபைல் பிக்சரை NFT வடிவில் உருவாக்கவும் அனுமதி அளித்தது. NFT எனப்படுவது பிளாக்செயின் எனும் டிஜிட்டல் லெட்ஜரில் சேமிக்கப்பட்ட தரவுகளின் அலகு ஆகும். இது கிரிப்டோகரன்சிக்கான அடிப்படை தொழில்நுட்பம் ஆகும். இந்த தொழில்நுட்பம் வளர்ந்தவுடன், NFTகள் முக்கியத்துவம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

NFT-கள், டிஜிட்டல் ஃபைல்களை தனித்தன்மையுடன் சரிபார்க்கப் பயன்படும் சான்றிதழ்களுடன் வருகின்றன. NFT டிஜிட்டல் சொத்துகளாக புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோக்கள், அனிமேஷன்கள் உள்ளிட்ட டிஜிட்டல் சொத்துக்களை குறிக்கும்.

 

ELON MUSK, TWITTER, NFT PROFILE PICTURE, எலான் மஸ்க், ட்விட்டர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்