"நண்பரின் மனைவியுடன் ரகசிய உறவா??.." சர்ச்சையை உண்டு பண்ணிய செய்தி.. எலான் மஸ்க் சொன்னது என்ன?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் மிக பெரிய பணக்காரரான எலான் மஸ்க், அடிக்கடி இணையத்தில் அதிகம் வைரலாக கூடியவர்.

Advertising
>
Advertising

Also Read | விறுவிறுப்பாக நடந்த கபடி போட்டி.. "பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய அந்த ஒரு கணம்.." இளம் வீரருக்கு நேர்ந்த 'துயரம்'

ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் எலான் மஸ்க், தொழில் குறித்த ஆலோசனைகள் வழங்குவது, நெட்டிசன்களுக்கு தேவைப்படும் தகவல்களை பகிர்வது, மீம்ஸ்கள் பகிர்வது, நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பது என எப்போதும் படு பிசியாக இயங்க கூடியவர். இவரது ட்விட்டர் டைம் லைன், எப்போதுமே பயனுள்ள தகவல்களை கொண்டு நிறைந்திருக்கும்.

சமீப காலத்தில், ட்விட்டர் - எலான் மஸ்க் விவகாரம், கிரீஸில் சட்டை போடாமல் கடலில் குளித்த எலான் மஸ்க் புகைப்படங்கள், இவை அனைத்துக்கும் எலான் மஸ்க் கொடுக்கும் கமெண்ட்கள் என அடுத்தடுத்து எலான் மஸ்க் தொடர்பான செய்திகள் இணையத்தில் தீயாக பரவி இருந்தது.

அந்த வகையில், தற்போது எலான் மஸ்க் குறித்த தகவல் ஒன்று, இணையத்தில் அதிகம் சர்ச்சைகளை உண்டு பண்ணி இருந்த நிலையில், இதற்கான விளக்கத்தையும் அவரே தற்போது கொடுத்துள்ளார்.

தன்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரின் மனைவியுடன், எலான் மஸ்க் ரகசிய உறவை வைத்திருந்ததாக செய்திகள் வெளியாகி, சர்ச்சைகளை உண்டு பண்ணி இருந்தது. முன்னதாக, கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் எலான் மஸ்க்கின் நண்பர், கடந்த ஜனவரி மாதம் விவாகரத்து கோரியும் முறையிட்டிருந்தார்.

இதற்கு பின், எலான் மஸ்க் மற்றும் அவரது நண்பரின் மனைவி இடையே உறவு ஏற்பட்டதாக சில வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தது. அது மட்டுமில்லாமல், நெட்டிசன்கள் மத்தியில் இந்த செய்திகள் கடும் பரபரப்பை உண்டு பண்ண, பலரும் பல விதமான கருத்துக்களையும் தெரிவித்து வந்தார்கள்.

அப்படி ஒரு சூழ்நிலையில் தான், இது தொடர்பான வதந்திகளை மறுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் சில விளக்கங்களையும் எலான் மஸ்க் அளித்துள்ளார். இது தொடர்பான எலான் மஸ்க்கின் சில ட்விட்டர் பதிவுகளின் படி, தனக்கும் தன்னுடைய நண்பரின் மனைவிக்கும் இடையே உறவு இருப்பதாக வலம் வரும் தகவல்,  முழுக்க முழுக்க முட்டாள்தனமானது என எலான் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என குறிப்பிட்ட எலான் மஸ்க், இருவரும் சமீபத்தில் ஒன்றாக கலந்து கொண்ட  பார்ட்டி ஒன்றின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். மேலும் தனது நண்பரின் மனைவியை மூன்று ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே சந்தித்துள்ளதாகவும், இந்த சந்திப்பின் போது  எங்களை சுற்றி நிறைய பேர் இருந்ததாகவும், ரொமான்டிக்காக எங்களுக்குள் எதுவுமே நடக்கவில்லை என்றும் எலான் மஸ்க் தன்னுடைய ட்விட்டர் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல, தான் நீண்ட நாட்களாக உடலுறவு கொண்டதே இல்லை என்றும் எலான் மஸ்க் விளக்கமளித்துள்ளார். அடிக்கடி இணையத்தில், எலான் மஸ்க் குறித்த ஏதாவது ஒரு செய்தி வலம் வந்து கொண்டே இருக்கும் நிலையில், தற்போது வெளியான சர்ச்சை செய்தியும், அதற்கு எலான் மஸ்க் அளித்த விளக்கம் குறித்தும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read | லாட்டரியில்.. 1 லட்சம் டாலர் பரிசு.. "ஆனா, அதுக்கு முன்னாடி.." இன்ப அதிர்ச்சியில் உறைந்த பெண்

ELON MUSK, ELON MUSK AFFAIR RUMOURS, FRIEND WIFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்