செவ்வாய் கிரகத்துக்கு உதவுறீங்க .. எங்களுக்கும் பாத்து செய்ங்க.. உக்ரைன் கோரிக்கை .. மஸ்க் போட்ட மாஸ் ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சமகால வரலாறு காணாத பெரும்போர் ஒன்றை உக்ரைன் மீது துவங்கி இருக்கிறது ரஷ்யா. சுமார் ஒன்றரை லட்சம் ரஷ்ய வீரர்கள் உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதில் 198 உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல், விமான நிலையங்கள், கப்பல் படை என உக்ரைன் அரசின் உட்கட்டமைப்புகளை தகர்த்து வருகிறது ரஷ்யா. இதனால் அந்நாட்டில் இணைய சேவை முடங்கியது.

Advertising
>
Advertising

இதன் காரணமாக தங்களது நாட்டில் நடக்கும் போரை பற்றி வெளியுலகிற்கு தெரிவிக்க முடியாமல் போவதோடு, ரஷ்ய படைகள் இருக்கும் இடங்களை கண்டறிய முடியாது ஆகவே தங்களுக்கு உதவி செய்யும்படி உக்ரேன், எலான் மஸ்க்கிற்கு கோரிக்கை வைத்தது.

கோரிக்கை

இதுபற்றி உக்ரைன் நாட்டின் துணை பிரதமர் மைக்கைலோ ஃபெடோரோவ் (Mykhailo Fedorov) தனது ட்விட்டர் பக்கத்தில்,"நீங்கள் செவ்வாய் கிரகத்தை குடியேற்ற முயற்சிக்கும் போது..ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறது! உங்கள் ராக்கெட்டுகள் விண்வெளியில் இருந்து வெற்றிகரமாக தரையிறங்கும்போது.. ரஷ்ய ராக்கெட்டுகள் உக்ரேனிய குடிமக்களை தாக்குகின்றன! உக்ரைனுக்கு ஸ்டார்லிங்க் நிலையங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் உக்ரைன் துணை பிரதமர் வைத்த கோரிக்கைக்கு 10 மணி நேரம் கழித்து டிவிட்டரில் பதில் அளித்திருக்கிறார் மஸ்க். தனது ட்வீட்டில்," ஸ்டார்லிங்க் சேவைகள் உக்ரைனில் துவங்கப்பட்டுள்ளன" எனக் குறிப்பிட்டு இருந்தார்.

ஸ்டார்லிங்க் சேவை

உலகம் முழுவதும் அதிவேக இணைய வசதியை ஏற்படுத்த எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் என்னும் திட்டத்தை துவங்கி செயல்படுத்தி வருகிறது. விண்வெளியில் 2000 செயற்கை கோள்களை நிறுவி அதன்மூலம் அதிவேக இணைய சேவையை சாத்தியமாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். இந்நிலையில், தற்போது உக்ரேனுக்கு இணைய சேவைகள் வழங்க எலான் மஸ்க் உத்தரவிட்டிருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ELONMUSK, SPACEX, ஸ்டார்லிங்க், ரஷ்யா, உக்ரைன், RUSSIA, UKRAINE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்