‘பஸ்ல என்ன இருக்கு???’... ‘பட்டப்பகலில் பஸ்ஸை மறித்து’... ‘யானை செய்த சிறப்பான காரியம்’... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இலங்கையில் காட்டுப்பகுதியில் பேருந்து ஒன்றை வழிமறித்த யானை ஜன்னல் வழியே தும்பிக்கையை உள்ளே நுழைத்து வாழைப்பழத்தை எடுத்து செல்லும் பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டரங்காமாவில் வனப்பகுதிக்கு அருகே உள்ள சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருக்கிறது. அப்போது அங்கு திடீரென காட்டு யானை ஒன்று வந்ததால், அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் வாகனத்தை உடனடியாக நிறுத்தி பேருந்தின் கண்ணாடியை மூட முயல்கிறார். ஆனால் அதற்குள் பசியுடன் இருந்த அந்த யானை, தும்பிக்கையை வாகனத்திற்குள் நுழைத்து உணவை தேடியது. அங்கு இருந்தவர்கள் வாழைப்பழத்தை கொடுக்க முயற்சித்தனர்.

இறுதியில் தானாகவே வாழைப்பழங்களை எடுத்த யானை, யாரையும் ஒன்றும் செய்யாமல் சற்று விலகிச் சென்றது. இதுதான் சமயம் என எதிர்பார்த்த ஓட்டுநர், உடனடியாக வாகனத்தை இயக்கி யானையிடம் இருந்து தப்பித்து சென்றார். வனத்துறை அதிகாரியான பிரவீன் குமார் இந்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘வனப்பகுதியில் காட்டு விலங்குகளுக்கு உணவு தர வேண்டாம் என பலகை வைக்கப்பட்டுள்ளதற்கு இதுவும் ஒரு காரணம்.

புதிய சுவையை விரும்பும் விலங்குகள், மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு வர ஆரம்பிக்கின்றன’ என குறிப்பிட்டுள்ளார். சுங்க கட்டணம் வசூலிப்பது போல சாலையின் நடுவே, பேருந்தை வழிமறித்து யானை செய்த காரியத்தை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த வீடியோவை பகல் கொள்ளை என்ற தலைப்புடன் வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான், ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட, பலரால் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்