உலகையே 'உலுக்கிவரும்' கொரோனா... பாதிப்பிலிருந்து 'மீண்ட' கையோடு... 'தேர்தலை' தொடங்கிய 'நாடு!'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட கையோடு நாடாளுமன்ற தேர்தலை திட்டமிட்டபடி தென் கொரியா தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸால் சீனா பாதிக்கப்பட்ட ஓரிரு வாரங்களிலேயே தென் கொரியாவும் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முன்னணிக்கு சென்றது. இதையடுத்து அந்நாடு பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல், அறிகுறி தென்பட்ட அனைவருக்கும் பரிசோதனை, விரைவில் சோதனை முடிவை அறிதல், கட்டாய சமூக விலகல் போன்ற நடவடிக்கைகளால் நோய் பரவலை மிக விரைவாகக் கட்டுப்படுத்தியது.
தென் கொரியாவில் இதுவரை 10,450 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அவர்களில் 208 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தென் கொரியாவில் இன்று புதிதாக 27 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தென் கொரிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் கொரோனா அச்சுறுத்தலையும் மீறி திட்டமிட்டபடி தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக வரும் 15ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இன்று முதலே வாக்குப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் வாக்காளர்கள் அனைவரும் முகக்கவசமும், கையுறையும் அணிந்து வர வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், வாக்குச்சாவடியில் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு பின்னரே வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதைத்தொடர்ந்து முகக்கவசம், கையுறை அணிந்த மக்கள் போதுமான இடைவெளி விட்டு மிக நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகத்தில் 5 பேர் மூலமாக 72 பேருக்கு கொரோனா தொற்று!'... தமிழக அரசு தலைமை செயலாளர் பரபரப்பு பேட்டி!
- ‘கொரோனா வைரசை கட்டுப்படுத்த இதுதான் ஒரே வழி’... ‘சீனா வுஹான் நகரத்தில் வாழும்’... ‘இந்திய விஞ்ஞானிகளின் வழிகாட்டல்கள்’!
- இந்தியாவில் 'தொடர்ந்து' பாதிப்பு 'அதிகரித்து' வரும் நிலையில்... 'ஐசிஎம்ஆர்' வெளியிட்டுள்ள 'ஆறுதல்' செய்தி...
- 'இப்போ தான் எல்லாம் சரி ஆகுது'...'உடனே தன்னோட வேலைய காட்டிய சீனா'...மூக்கை உடைத்த இந்தியா!
- ‘ஊரடங்கு’ காலத்துல மக்கள் ‘இதுல’ தான் அதிக நேரம் செலவழிக்காங்கலாம்.. போன வார ரெக்கார்ட் மட்டும் கேட்டா ‘ஷாக்’ ஆகிடுவீங்க..!
- 'இன்னமும் கூட அங்க நிறைய வைரஸ் இருக்கலாம்!... 'எத்தனை பேர் உயிர் போனா 'இத' பண்ணுவீங்க!?'... ஏகக்கடுப்பில் அமெரிக்கா!... என்ன செய்யப்போகிறது சீனா?
- திருப்பதி ஏழுமலையான் கோவில்... பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!... தரிசனத்திற்கான முன்பதிவில் தேவஸ்தானம் அதிரடி!
- ‘கொரோனா பாதிச்சவங்கள விட எங்க நிலைமை கொடுமை’.. ‘கருணை உள்ளம் கொண்ட யாராச்சும் உதவுங்க’.. திருநங்கைகள் உருக்கம்..!
- 'மன்னிச்சிருங்க தப்பு நடந்து போச்சு'...'சீனாவுக்கு பதிலா இந்தியான்னு சொல்லிட்டோம்'...'WHO' செஞ்ச பிழை!
- ‘ஊரடங்கால் விளைந்த நன்மை’... 'கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதில்'... ‘அடுத்த சில வாரங்கள்’... 'மருத்துவத் துறை நிபுணர்கள் கருத்து'!