"வா டான்ஸ் ஆடலாம்".. ஓடும் ரயில்ல Thug Life சம்பவம் செஞ்ச தாத்தா.. பாட்டி எடுத்த ஸ்வீட் ரிவெஞ்ச்.. வைரலாகும் Cute வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஓடும் ரயிலுக்குள் வயதான தம்பதியர் நடனமாடும் வீடியோ தற்போது சமுக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

"வா டான்ஸ் ஆடலாம்".. ஓடும் ரயில்ல Thug Life சம்பவம் செஞ்ச தாத்தா.. பாட்டி எடுத்த ஸ்வீட் ரிவெஞ்ச்.. வைரலாகும் Cute வீடியோ..!
Advertising
>
Advertising

Also Read | ராகிங் புகார்கள் குறித்து பேசிய டிஜிபி சைலேந்திர பாபு .. காவல்துறை அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு..!

இணையத்தின் வளர்ச்சி காரணமாக சமூக வலை தளங்களின் வீச்சு மக்களிடையே அதிகரித்திருப்பதை நாம் கண்கூடாக பார்த்துவருகிறோம். சமூக வலை தளங்கள் மக்களிடையே பாலம் போல செயல்பட்டு வருகின்றன. உலகின் எங்கோ ஒரு மூலையில் நடைபெறும் விஷயங்கள் கூட நொடிப்பொழுதில் சோசியல் மீடியாவில் வைரலாகி விடும். சொல்லப்போனால் இதுபோன்ற செய்திகளையோ, வீடியோக்களையோ பார்க்கவே பெரும்பான்மையான மக்கள் சோசியல் மீடியாவில் காத்திருக்கின்றனர். அப்படியானவர்களை திருப்திப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Elderly man invites wife to dance on train video goes viral

இந்த வீடியோவில் ஓடும் ரயிலின் உள்ளே பயணிகள் அமர்ந்திருக்கின்றனர். இசைக்குழு ஒன்று இசையமைத்துக்கொண்டு வருகிறது. அதனை ரசித்து பார்க்கிறார் வயதான தாத்தா ஒருவர். ஒருகட்டத்தில் எழுந்து நிற்கும் அவர், தனது மனைவியை ரயிலின் உள்ளே நடனமாட அழைக்கிறார். ஆனால் அந்த பாட்டி மறுத்துவிடுகிறார்.

இதனையடுத்து, அருகில் இருந்த மற்றொரு பெண்ணை நடனமாட அந்த தாத்தா அழைக்க, அந்தப் பெண்ணும் சம்மதிக்கிறார். இருவரும் நடனமாட அங்கிருந்த அனைவரும் அதை ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். ஆனால், தனது கணவர் இன்னொரு பெண்ணுடன் நடனமாடுவதை கண்ட பாட்டி, உடனே எழுந்து நிற்கிறார்.

தனது அருகில் இருந்த ஒரு ஆண் நபரை பாட்டி நடனமாட அழைக்க, இருவரும் ஒன்றாக நடனமாடுகிறார்கள். கணவருக்கு ஸ்வீட் ரிவெஞ்ச் கொடுக்கும் விதமாக அமைந்த பாட்டியின் இந்த செயல் அங்கிருந்த அனைவரையும் சிரிக்க வைத்துவிட்டது. எங்கே எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியாத நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நெட்டிசன்கள் இந்த பதிவில்,"இந்த நாளை நிறைவுபெறச்செய்யும் வீடியோ" என்றும் "இவ்வளவு வயதான நிலையிலும் இருவரிடையேயும் காதல் அப்படியே இருக்கிறது" என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

 

Also Read | இணையத்தில் வைரலாகும் உலகின் மிக நீளமான மூக்குடைய நபர்.. யாரு சாமி இவரு?.. வெளியான சுவாரஸ்ய தகவல்..!

OLD MAN, WIFE, DANCE, TRAIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்