'வயதான தம்பதிகளுக்கு இரட்டை குழந்தைகள்...' '46' வருஷம் வெயிட் பண்ணிருக்காங்க...! 'இது எங்க கனவு...' 'அவங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி...' புகழும் மருத்துவர்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

68 வயதான நைஜீரிய பெண்ணுக்கு எவ்வித ஆபத்தும் இன்றி, ஆண் மற்றும் பெண் என இரட்டை குழந்தை பிறந்த சம்பவம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

நைஜிரியாவின் லாகோஸ் நகரில் வசித்து வரும்  68 வயதான மார்கரெட் அடெனுகா மற்றும் அவரது கணவர் நோவா அடெனுகா (77) விற்கும் பல மருத்துவ முயற்சிகளுக்கு பின் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.

1974 ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என கனவு இருந்தது. பல்வேறு மருத்துவ ஆலோசனைகள், மருந்துகள் மூலம் எந்த பயனையும் அடெனுகா தம்பதியினர்  அடையவில்லை. இருப்பினும் குழந்தைகள் மேல் அவர்கள் கொண்டிருந்த அன்பு அவர்களை பின்வாங்க விடவில்லை. இதற்கு முன் மூன்று முறை ஐவிஎஃப் நடைமுறைகளை மேற்கொண்டாலும் தோல்வியை தழுவிய தம்பதிகள் தற்போது தங்களின் விடாமுயற்சியால் வயதை கடந்தும் ஆண் மற்றும் பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆகி உள்ளனர்.

கர்ப்பமடைந்து 37 வாரங்கள் கழிந்த நிலையில், கடந்த வாரம் செவ்வாய்கிழமை லாகோஸ் பல்கலைக்கழக கல்லூரி மருத்துவமனையில் அறுவைசிகிச்சை மூலம் இரட்டையரை உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளார் மருத்துவர் அடேயெமி ஒகுனோவோ.

நைஜீரியாவில் மார்கரெட் அடெனுகா மற்றும் நோவா அடெனுகா தம்பத்தியினரே வயதான நிலையில் இரு குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ளார் என மருத்துவ நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. மேலும்

மார்கரெட் அடெனுகா ஒரு வயதான பெண் மற்றும் முதல் முறையாக தாயாக போகிறவர்கள். இரட்டையர்கள் என்பதால் மிகவும் சவாலான ஆபத்தான முறையாக இருந்தது. ஆனால் மார்கரெட் மிகவும் அதிர்ஷ்டசாலி எவ்வித ஆபத்தையும் சந்திக்காமல் தற்போது இரு குழந்தைகளுடன் ஆரோக்கியமாக உள்ளதாகவும் மருத்துவர் ஒகுனோவோ மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தங்களின் 46 வருட கனவு இரட்டிப்பாக நிறைவேறியுள்ளதால் அடெனுகா தம்பதியினரும், தங்களுடைய மருத்துவம் மூலம் தாயையும் சேயையும் எவ்வித ஆபத்தும் இல்லாமல் வீட்டிற்கு அனுப்பிய மருத்துவ நிர்வாகமும் மகிழ்ச்சியுடன், திருப்தியுடன் உள்ளதாக தெரிவித்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்