எகிப்து: கிஸா பிரமிட்டில் இருந்த ரகசிய பாதையை கண்டறிந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

எகிப்து பிரமிட்டின் உள்ளே ரகசிய பாதை இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

                       Images are subject to © copyright to their respective owners.

பிரமிடுகள்

எகிப்து என்றவுடன் செழித்து ஓடும் நைல் நதியும், பிரம்மாண்ட பிரமிடுகளும் தான் ஞாபகத்திற்கு வரும். உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் பிரமிடுகள் சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டதாக நிபுணர்கள் கூறுவது உண்டு. 146 மீட்டர் உயரத்திற்கு பிரம்மண்டமாக கட்டப்பட்ட இந்த பிரமிட்டில் பல லட்சம் கற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதன் கட்டுமான யுக்தி குறித்து இன்னும் ஆய்வுகள் ஒருபக்கம் நடைபெற்று வருகின்றன. எகிப்து மட்டும் அல்லாது உலகின் பல நாடுகளில் பிரமிடுகள் கண்டறியப்பட்டாலும் எகிப்தில் உள்ள கிஸா பிரமிடு எல்லாவற்றிற்கும் மாஸ்டர் பீஸாகவே கருதப்படுகிறது.

Images are subject to © copyright to their respective owners.

கிஸா

இந்த சூழ்நிலையில் கிஸா பிரமிடு உள்ளே பாதை ஒன்று இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். 2015 ஆம் ஆண்டு முதல் அகச்சிவப்பு தெர்மோகிராபி, 3டி சிமுலேஷன்கள் மற்றும் காஸ்மிக்-ரே இமேஜிங் உள்ளிட்ட உயர்தொழில்நுட்ப வசதிகளுடன் ஆராய்ச்சியாளர்கள் இந்த கிஸா பிரமிட்டை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தான் ரகசிய பாதை இருப்பதை நிபுணர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

ரகசிய அறை

கிஸா பிரமிட்டின் பிரதான நுழைவு வாயிலுக்கு பக்கத்திலேயே இந்த பாதையும் இவ்வளவு நாட்களாக இருந்திருக்கிறது. இந்த பாதை 30 அடி நீளம் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதான நுழைவு வாயிலில் எடையை மறுபகிர்வு செய்யும் நோக்கில் இந்த பாதை கட்டப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள எகிப்தின் பழங்காலப் பொருள்களின் உச்ச கவுன்சிலின் தலைவர் முஸ்தபா வசிரி," நாங்கள் இந்த ஆய்வை தொடரப் போகிறோம். அந்த பாதையின் இறுதியில் என்ன இருக்கிறது? வேறு ஏதேனும் பாதைகள் இதேபோல மறைந்திருக்கின்றனவா? என தேட இருக்கிறோம்" என்றார்.

Images are subject to © copyright to their respective owners.

சுமார் 4500 ஆண்டுகள் பழமையான கிஸா பிரமிட்டின் உள்ளே ரகசிய பாதை இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருப்பது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

EGYPT, GIZA, PYRAMID

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்