'சார், மசாஜ் பார்லருக்கு வெளிய ஊசி எல்லாம் கிடக்கு'... 'போலீசாருக்கு பறந்த ரகசிய தகவல்'... ஹலோ, 'மசாஜ் பார்ல'ருல வச்சு பண்ற வேலையா இது!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஈக்வடார் நாட்டின் தலைநகரான குயிட்டோ பகுதியில் சமீப காலம் வரை மசாஜ் பார்லர் ஒன்று செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், திடீரென அந்த பார்லர் இருந்த இடத்தில் சுகாதார மையம் ஒன்று தோன்றியுள்ளது. அது மட்டுமில்லாமல், அது கொரோனா மருந்துகளுக்கான சுகாதார மையமாகவும் மாறியுள்ளது. பெண் ஒருவர் நடத்தி வரும் இந்த மையத்தில், இதுவரை சுமார் 70,000 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

தன்னை மருத்துவர் என மற்றவர்களிடம் அந்த பெண் அடையாளப்படுத்தியுள்ள நிலையில், ஒரு டோஸ் மருந்துக்கு 15 டாலர் பெற்றுக் கொண்டுள்ளார். மேலும், மூன்று டோஸ் எடுத்துக் கொண்டால் மட்டுமே முழு எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என பொது மக்களிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், முழு உடல் சிகிச்சை எனக்கூறி, 100 டாலர் வரை பெற்றுக் கொண்டு அதன் பிறகே அனைவருக்கும் தடுப்பூசியை செலுத்தியுள்ளார்.

இப்படி போலி தடுப்பு மருந்து செலுத்தி வரும் தகவல் வெளியானதையடுத்து, போலீசார் ஒருவர் அங்கு பொது மக்களை போல சென்று இதுகுறித்து துப்பு துலக்கியுள்ளார். அதன்பிறகு, அங்கு சென்ற அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர். மருத்துவர் என தெரிவித்துக் கொண்ட அந்த பெண்ணிடம், அதற்கான தகுந்த ஆதாரங்கள் எதுவுமில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த பெண் கொரோனா தொற்றுடைய ஆயிரக்கணக்கான மக்களுக்கு சிகிச்சையளித்ததாக தெரிவித்துள்ளார். அக்கம் பக்கத்தினர் சிலரும், அந்த பெண்ணிற்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஈக்வடார் நிர்வாகம், இதுவரை அமெரிக்காவின் பைசர் நிறுவன தடுப்பூசிக்கும், பிரிட்டனின் அஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் தடுப்பூசிக்கும் மட்டுமே அனுமதியளித்துள்ளது. அதுவும் கூட, வரும் மார்ச் மாதம் முதலே மக்களுக்கு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனிடையே, கொரோனா தடுப்பூசி எனக்கூறி போலி மருந்தை 70,000 மக்களுக்கு அங்குள்ள சுகாதார மையம் செலுத்தியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்