அதிகாலை அந்தமான் தீவில் ஏற்பட்ட ‘திடீர்’ நிலநடுக்கம்.. தேசிய புவியியல் ஆய்வு மையம் முக்கிய தகவல்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அந்தமான்-நிக்கோபர் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் தீவில் இன்று (08.11.2021) அதிகாலை 5 மணியளவில் நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டதால் வீடுகள் லேசாக குலுங்கியுள்ளன. அந்தமானின் போர்ட் ப்ளேர் நகரின் அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3-ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய புவியியல் மையம் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அதில், ‘இன்று அதிகாலை 5.28 மணிக்கு அந்தமான் பகுதிகளில் ரிக்டர் அளவுகோல் 4.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது போர்ட் ப்ளேர் நகரின் தென்கிழக்கே 218 தொலைவில் ஏற்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு, பொருள் சேதம் ஏதும் ஏற்பட்டதா என்று இதுவரை தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

EARTHQUAKE, ANDAMANANDNICOBAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்