‘அதே மாதம்.. அதே இடம்’.. 11 வருசத்துக்கு அப்புறம் மறுபடியும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுத்த நாடு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

வடக்கு ஜப்பான் பகுதியான ஃபுகுஷிமா, மியாகி கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், கடலுக்கு அடியில் சுமார் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மியாகி, ஃபுகுஷிமா மாகாணங்களில் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில பகுதியில் ஏற்கெனவே சுனாமி அலை தாக்கியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக டோக்கியோ நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் சுமார் 20 லட்சம் வீடுகள் மின்சார வசதியை இழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘உள்ளூா் நேரப்படி புதன்கிழமை இரவு 11:36 மணிக்கு கடலுக்கு அடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக மியாகி, ஃபுகுஷிமா நகரங்களில் 3 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் வர வாய்ப்புள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 11 ஆண்டுகளுக்கு (2011) முன்பு இதே மார்ச் மாதத்தில் ஜப்பானின் ஃபுகுஷிமா பகுதியில் 9.0 ரிக்டர் அளவிலான  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் அங்கு சுனாமி பேரலை தாக்கியது. அதில் ஃபுகுஷிமா அணுஉலை பாதிக்கப்பட்டு ஜப்பான் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டது. சமீபத்தில் தான் இந்த நாளை அந்நாட்டு மக்கள் நினைவுகூர்ந்தனர். இந்த சூழலில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

EARTHQUAKE, TSUNAMI, JAPAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்