"ஆத்தி.. இது அதுல்ல?.. ஆஹா.. வந்துட்டான்யா.. வந்துட்டான்யா!".. டிவி இண்டர்வியூ நேரலையில் திடீரென ‘ஜர்க்’ ஆன நியூஸிலாந்து பிரதமர்.. பரபரப்பு வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நியூஸிலாந்து பிரதமர் ஜசின்டா அர்டெர்ன் டிவி நிகழ்ச்சி ஒன்றுக்கு நேரலையில் பேட்டி அளித்துக் கொண்டிருக்குபோது நிலநடுக்கம் எற்பட்டு ஒரு அடி ஜர்க் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertising
Advertising

அங்கு 2011-ல் ஏற்பட்ட நிலநடுக்கம் 185 பேரின் உயிரைப் பறித்த சம்பவத்தை உலகநாடுகள் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிராக தீவிரமாக பணிபுரிந்து வரும் பெண் பிரதமர்களுள் முக்கியமானவராக பார்க்கப்படும்  ஜசின்டா அர்டெர்ன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு நேர்காணல் கொடுத்தார். அதில் பேட்டியாளர் ரியான் நெறியாளர் அறையில் இருந்தபடி, தொலைக்காட்சி வழியே பார்த்து ஜசின்டா அர்டெர்னிடம் கேள்விகளைக் கேட்க, அதற்கு வேறொரு கருத்தரங்க அறையில் இருந்தபடி ஜெசிண்டா பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போது திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தை உணர்ந்து ஒரு அடி ஜர்க் ஆகியுள்ளார்.

உடனே, பதறியபடி, நெறியாளரிடம், “நாம் இங்கே ஒரு பூகம்பத்தை சந்திக்கிறோம் ரியான், கொஞ்சம் நல்ல நடுக்கம்தான்! என் பின்னால் இருக்கும் பொருட்கள் அதிர்வதை உங்களால் காண முடிகிறது பாருங்கள்!” என்று தெரிவிக்கிறார். நில அதிர்வு சமநிலைக்கு வரவும், ஜசின்டாவும் சமநிலைக்கு வர்ந்தபடி மீண்டும் பேட்டியை சிரித்துக்கொண்டே தொடர்கிறார். பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில்

அமைந்துள்ள நியூஸிலாந்துக்கும் நில அதிர்வுக்கும் மிகவும் நெருக்கம் என்று புவியியல் கூறும் நிலையில், அங்கு கடந்த திங்கள் அன்று 5.6 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் பதிவானதாகக் கூறப்படுகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்