கரெக்ட்டா 4.30 மணிக்கு ஒரு கனவு கண்டேன்.. காலையில எந்திரிச்சு மெயில் செக் பண்ணினப்போ.. காத்திருந்த இன்ப அதிர்ச்சி

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கனடா: கனடாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அதிகாலை 4.30 மணிக்கு அடித்துள்ளது. அதை அவர் கனவு என நினைத்து மீண்டும் உறங்கிய சம்பவமும் நடந்துள்ளது.

Advertising
>
Advertising

ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டம் எப்போது எத்தனை மணிக்கு வரும் யாரும் கணிக்க முடியாது. முந்தைய நாள் வரைக்கும் சாதாரண மனிதர்களாக வாழ்ந்தவர்கள் கோடீஸ்வரராக மாறும் நிகழ்வு அடிக்கடி நடக்கிறது. கனடாவின், ஒன்றாறியோவின் பர்லிங்டன் நகரை சேர்ந்தவர் 33 வயதான அரவிந்த ராகேஷ் கஸ்தூரி. இவரின் வாழ்க்கையில் சில நாட்களுக்கு முன் அசாதாரண சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

இது எல்லாமே கனவா?

எப்போதும் போல இரவு உறங்க தொடங்கிய அரவிந்திற்கு அதிகாலை 04.30 மணிக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. மின்னஞ்சல் கேட்டு ஒலி கேட்டு பாதி தூக்கத்தில் இருந்து எழுந்த அரவிந்த் என்ன ஈமெயில் என்று பார்த்துள்ளார். அப்போது, லொடோ 6/49 லொட்டரி குலுக்கலில் ஒரு லட்சம் டாலர் பரிசு விழுந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைக் கண்டுகொள்ளாமல் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்துள்ளார் அரவிந்த். அதன் பின் மறுநாள் காலை எழுந்தவுடன் தான் மின்னஞ்சலை ஓபன் செய்தது, லாட்டரி விழுந்த மின்னஞ்சல் எல்லாமே கனவு என நினைத்துள்ளார்.

இமெயில் செக் செய்ய விரும்பவில்லை:

இதுகுறித்து கூறிய அரவிந்த ராகேஷ் கஸ்தூரி, 'மின்னஞ்சலை பார்த்த மறுநாள் வரை எனக்கு நடந்த சம்பவங்கள் எல்லாமே கனவு போல இருந்தது. கனவு என்று நினைத்த நான் மீண்டும் இமெயில் செக் செய்ய விரும்பவில்லை. அதனால் நான் என் போனை அப்படியே தூரமாக தூக்கி வைத்துவிட்டேன். பின்னர் அடுத்தநாள் அதை பார்த்த போது எனக்கு வார்த்தையே வரவில்லை, அதிர்ச்சியாகி விட்டேன். ஏனென்றால் எனக்கு விழுந்த பரிசு தொகை அந்த மாதிரி.

இந்த நிகழ்வை என் மனைவியும் இதை முதலில் நம்பவில்லை, சரியாக பார்த்து உறுதிப்படுத்த சொன்னார். நான் பரிசு தொகையில் புதிய வீடு வாங்கவுள்ளேன், என் வாழ்வில் இவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலியாக நான் இதுவரையில் இருந்ததில்லை' என கூறியுள்ளார்.

JACKPOT, ARAVIND RAKESH, CANADA, LOTTERY, ஜாக்பாட், அரவிந்த ராகேஷ் கஸ்தூரி, கனடா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்