'வீட்டின் கேட்டை உடைத்து எறிந்த டுவைன் ஜான்சன்'... 'இதற்காகவா உடைச்சாரு'... 'வாயடைத்து போன ரசிகர்கள்'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரபல ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன், தனது வீட்டின் கேட்டை உடைத்து எறிந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்காக அவர் கூறியுள்ள காரணம் ரசிகர்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

முன்னாள் WWF வீரரும்,  பிரபல ஹாலிவுட் நடிகரும், ராக் என ரசிகர்களால் அழைக்கப்படும் டுவைன் ஜான்சனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பாஸ்ட் ஆண்ட் பியூரியஸ், ஜூமாஞ்சி, ஸ்கைஸ்க்ராப்பர், ஸ்கார்ப்பியன் கிங் உள்ளிட்ட பல்வேறு படங்களில் அவர் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும், அவர் தற்போது பதிவிட்டிருந்த வீடியோ பெரும் வைரலானது. அதில் தனது வீட்டின் கேட்டை தானே உடைத்து எறிந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் எதற்காக அவ்வாறு செய்தார் என்பது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார். அதில், ''படப்பிடிப்புக்குச் செல்லும்போது கேட் திறக்காததால், அதை உடைத்துத் தள்ளிவிட்டு வெளியேறியுள்ளார். கேட்டை திறப்பதற்கான ஹைட்ராலிக் சிஸ்டம் வேலை செய்யவில்லை எனத் தெரிவித்துள்ள டுவைன், இந்த ஹைட்ராலிக் சிஸ்டம் மின்சாரம் இல்லை என்றாலும் வேலை செய்யும், ஆனால் இந்த முறை வேலை செய்யவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனக்காக நூற்றுக்கணக்கானோர் படப்பிடிப்பு தளத்தில் காத்துக்கொண்டிருந்ததால், அவர்களின் நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை. இதனால் என்னால் காத்துக்கொண்டிருக்க முடியவில்லை. அதனால் கேட்டை உடைத்துவிட்டுச் சென்றதாகத் தெரிவித்துள்ளார். அதன்பிறகு அங்கு வந்த வெல்டிங் பணியாளர்கள் கேட்டை சரிசெய்யும் வீடியோவையும் ராக் பதிவிட்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தன்னால் படப்பிடிப்பு தாமதமாகி விடக்கூடாது என்பதற்காக டுவைன் ஜான்சன், செய்த இந்த செயல் ரசிகர்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்