"இந்தியாலயும் நிலநடுக்கம் இருக்குமா?".. துருக்கி பூகம்பத்தை முன்பே கணிச்ச நிபுணர் சொன்ன பரபர தகவல்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மத்திய கிழக்கு நாடான துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. அந்நாட்டின் தென் மத்திய பகுதியில் உள்ள கசியான்டெப் நகருக்கு அருகே இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதனால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க, வீரர்கள் பாடுபட்டு வருகின்றனர்.

Advertising
>
Advertising

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | Jailer : முத்துவேல் பாண்டியனுடன் மலைக்கோட்டை வாலிபன்.. ரஜினி & மோகன்லால் சந்தித்த வைரல் ஃபோட்டோவில் உடன் இருப்பவர் இவரா?

அப்படி இருக்கையில், அடுத்தடுத்து மீண்டும் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை இன்னும் நிலைகுலைய வைத்துள்ளது. அது மட்டுமில்லாமல், அடுத்தடுத்த அதிர்வுகள் அண்டை நாடுகளான சிரியா, லெபனான், சைப்ரஸ், கிரீஸ், ஜோர்டான், இராக், ரொமானியா, ஜார்ஜியா, எகிப்து ஆகியவற்றிலும் உணரப்பட்டது.

ஒன்றிரண்டு நாட்களில் பல முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால், ஆயிரக்கணக்கான மக்கள் இதன் மூலம் உயிரிழந்துள்ளனர். அதே போல, எக்கச்சக்கமான் கட்டிடங்களும் சுக்கு நூறாகி போயுள்ளதால் இதில் சிக்கி உள்ளவர்களை மீட்க தொடர்ந்து மீட்புப் பணிகளும் நடைபெற்று வருகிறது. இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்தியா உள்ளிட்ட நாடுகளும் துருக்கிக்கு மீட்பு மற்றும் மருத்துவ குழுவை அனுப்பியுள்ளனர். இதனிடையே, நெதர்லாந்தை சேர்ந்த ஃபிராங்க் ஹுகர்பீட்ஸ் எனும் ஆய்வாளர் துருக்கி நிலநடுக்கம் நடக்க 3 நாட்களுக்கு முன்பாகவே இதனை கணித்துள்ளார். Solar System Geomatry Survey (SSGEOS) எனும் ஆய்வு மையத்தில் பணிபுரிந்து வரும் ஃபிராங்க் ஹுகர்பீட்ஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதே போல, ரிக்டர் அளவைக் கூட ஃபிராங்க் கணித்திருந்தார்.

அப்படி இருக்கையில், ஃபிராங்க் ஹுகர்பீட்ஸ் இந்தியாவில் நில அதிர்வு ஏற்பட போவது பற்றியும் வீடியோ ஒன்றில் பேசி உள்ளார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக அவர் பேசி உள்ள வீடியோவில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஆப்கானிஸ்தான் பகுதியில் ஏற்பட்டு அதன் விளைவுகள் பாகிஸ்தான் வழியே இந்தியா வரை ஏற்படும் என்றும் கணித்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

மேலும் மேற்கு திசையில் பாகிஸ்தான் வழியே இந்தியாவின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் நில அதிர்வு ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்திய பெருங்கடல் வரை இந்த நிலஅதிர்வு உணரப்படும் என்றும் ஃபிராங்க் ஹுகர்பீட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | "மொதல்ல இத Delete பண்ணுங்கப்பா".. ரசிகர் கேட்ட கேள்வி.. தினேஷ் கார்த்திக் கொடுத்த வைரல் ரியாக்ஷன்!!

EQARTHQUAKE, DUTCH RESEARCHER, PREDICTS, TURKEY EARTHQUAKE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்