'இதுக்கு மேல ஒரு நொடி கூட பொறுக்க முடியாது!' - அவசர அவசரமாக மலேசிய அரசு எடுத்த ‘பரபரப்பு’ முடிவு!
முகப்பு > செய்திகள் > உலகம்தென் கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை, மூன்று மாதங்களுக்கு முன்னர் 15 ஆயிரமாக இருந்தது.
இந்நிலையில் அந்நாட்டில் அண்மையில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்து 224 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவல் மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மலேசியாவின் மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா, பிரதமர் முஹிதின் விடுத்த கோரிக்கையை ஏற்று, நேற்று அவசர நிலை பிறப்பித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து முஹிதின் டிவியில் தன் நாட்டு மக்களிடம் கூறியதாவது, ராணுவ ஆட்சி, நாட்டின் அவசர நிலையின் போது அமல்படுத்தப்பட மாட்டாது. மக்களுக்கு என் தலைமையிலான அரசு தொடர்ந்து சேவை செய்யும். மேலும் மாநில சட்டசபைகள் மற்றும் பார்லி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட்1 அல்லது அதற்கு முன் வரை நிலைமையை பொறுத்து நாட்டில் அவசர நிலை அமலில் இருக்கும். அதுநாள் வரை பொதுத் தேர்தல் நடக்காது என அவர் பேசினார்.
முஹிதின் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆட்சிக்கு வந்தார். இந்நிலையில் எதிர்கட்சிகள் பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என முஹிதினுக்கு நெருக்கடி கொடுத்து வந்தன.
மேலும் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த, ஐக்கிய மலாய் தேசிய கட்சியும் ஆதரவை வாபஸ் பெறுவதாக மிரட்டல் விடுத்து வந்தது. இதனால் முஹிதின் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. ஆனால் நாட்டில் தற்போது அவசர நிலையை, முஹிதின் அமல்படுத்தி உள்ளதால், தனது பதவியை அவர் தற்காலிகமாக தக்க வைத்து உள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இனிமேல் வாரத்தின் 6 நாட்கள் ஸ்கூல் இருக்கு'... பள்ளிகள் திறப்பு தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்!
- கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் 28 நாள் ‘இதை’ தொடவேகூடாது.. அமைச்சர் விஜயபாஸ்கர் முக்கிய தகவல்..!
- சென்னை வந்தடைந்த கொரோனா தடுப்பூசிகள்!.. எந்தெந்த மாவட்டத்துக்கு எவ்வளவு?.. முழுவிவரம் உள்ளே!
- 'உலகமே கொரோனாவால் ஸ்தம்பித்துக் கொண்டிருக்கும் நிலையில்'.. ஜெர்மனியில் மட்டும் ‘இப்படி ஒரு மரபுவழி சிகிச்சையா?’.. ஆச்சரிய தகவல்!
- உலகையே உலுக்கிய கொரோனா உருவான ‘வூஹான்’ நகரம் இப்போ எப்படி இருக்கு..? 66 வயது தாத்தா சொன்ன அசரவைக்கும் பதில்..!
- 'தமிழகத்தின்' இன்றைய (12-01-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!
- “ரொம்ப தேவைதான்.. நாடே கொரோனாவுல இருக்குறப்ப.. இப்படியா செய்வீங்க?”.. ஜனாதிபதியையும், அவரது மனைவியையும் கரித்துக் கொட்டும் மக்கள்.. காரணம் இதுதான்!
- 'பொங்கல் விடுமுறையை கொண்டாட கடற்கரைக்கு வரும் மக்கள்'... தமிழக அரசின் அதிரடி உத்தரவு!
- 'கொரோனா 3.0-ஐ உறுதி செய்த நாடு...' 'இது 2.0-ஐ விட வித்தியாசமானது...' - தொற்றுக்கான அறிகுறியில் தெரிய வந்த அதிர்ச்சி தகவல்...!
- இந்தியா முழுவதும் நாளை முதல் ஆரம்பம்!.. 1 கோடி கொரோனா தடுப்பூசிகள் விநியோகம்!.. ஒரு மருந்தின் விலை என்ன?.. எப்படி கிடைக்கும்?