கொரோனா பரிசோதனை செய்ய.. நோயாளிகளை பொய் கூற வைப்பதாக வெளிப்படையாக கூறிய மருத்துவர்! ‘பரபரப்பு’ பின்னணி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா பரிசோதனைக்காக தங்களிடம் வரும் நோயாளிகளை வேறு வழியின்றி பொய் பேச வைப்பதாக மருத்துவர் ஒருவர் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

பிரிட்டன் தேசிய மருத்துவ சேவை அமைப்பு சில அறிகுறிகளை தான் Corona அறிகுறிகளாக தற்போதைய நிலையில் ஒப்புக் கொண்டு அவற்றை மட்டுமே வைத்து நோயாளிகளை இனம் கண்டு வருகிறது. அதாவது காய்ச்சல், இருமல் மற்றும் வாசனை, சுவை அறியும் திறன் இழப்பு உள்ளிட்ட சில அறிகுறிகளை வைத்து கொரோனா பரிசோதனைக்கு தேசிய மருத்துவ சேவை அமைப்பு நோயாளிகளை பரிந்துரை செய்கிறது.

ஆனால் கொரோனாவானது நாளுக்கு நாள் ஒரு புதிய அறிகுறிகளுடன் வருவதாகவும், அண்மையில் பலர் நாவு மற்றும் வாயில் ஏற்படும் புண், என புதிய புதிய அறிகுறிகளுடன் வந்து அவர்களுக்கு கொரோனா கண்டுபிடிக் கப்பட்டுள்ளதாகவும் பிரிட்டனைச் சேர்ந்த குடும்ப நல மருத்துவர் Dr Alex Sohal தெரிவித்திருக்கிறார். இதனால் தன்னிடம் வரும் நோயாளிகளில் மூக்கில் நீர் வடிதல், தொண்டை அழற்சி, தொண்டை கரகரப்பு, உடல் வலி, சோர்வு மற்றும் தலைவலி என விதவிதமான அறிகுறியுடன் வருபவர்களுக்கு கூட கொரோனா இருப்பதை கண்டு பிடித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த அறிகுறிகள் உள்ளவர்களுக்கு தேசிய மருத்துவ சேவை அமைப்பு கொரோனா பரிசோதனை செய்யாது என்பதால் வேறு வழியின்றி தம் நோயாளிகளிடம் அவர்களுக்கு காய்ச்சல், இருமல், வாசனை மற்றும் சுவை அறியும் திறன் இழப்பு உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாக பொய் கூற செல்வதாக Dr Alex Sohal தெரிவிக்கிறார். மேலும் கொரோனா அறிகுறிகளாக பிரிட்டன் அரசு முடிவு செய்து வைத்திருக்கும் சில அறிகுறிகள் அடங்கிய அந்த பட்டியலை மாற்ற வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

ALSO READ: “இங்க நிக்குறாரே.. இவர் ஒரு..” .. ‘எப்பேற்பட்ட மனுசன் அவரு’.. ‘துரு துரு’ இளைஞர் செய்த ‘சர்ச்சை’ காரியம்! ‘பரவும்’ டிக்டாக் வீடியோ!

இப்படிப்பட்ட அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால் மட்டும் தான் தற்போது காலவரையின்றி அமல்படுத்த பட்டிருக்கும் பொது முடக்கத்தில் இருந்து நாம் வெளியேற முடியும் என்றும் இல்லையென்றால் மேலும் மேலும் உலகம் முழுவதும் கொரோனா பரவி தான் வரும் என்றும் Dr Alex Sohal குறிப்பிடுகிறார். இந்நிலையில் இவரும் இவருக்கு கீழ் பணிபுரியும் 140 மருத்துவர்களும் சுகாதாரத்துறைக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்