போனில் கேட்ட 'சோக' செய்தியால்... காருடன் 'கடலுக்குள்' பாய்ந்த பெண்... கடைசில என்ன ஆச்சு?
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா காரணமாக துபாயில் மூடப்பட்ட கடற்கரைகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பிரபல கடற்கரைகளில் ஒன்றான அல் மம்சார் கடற்கரை மீண்டும் திறக்கப்பட்டு இருக்கிறது. இங்கு அமீரகத்தில் வசிக்கும் 41 வயது பெண் சமீபத்தில் சென்றுள்ளார்.
காரை அங்குள்ள கடற்கரை முகப்பில் நிறுத்த சென்றவருக்கு மொபைல் அழைப்பு வந்துள்ளது. பேசியவாறே காரை ஓட்டியவர் எதிர்முனையில் கேட்ட சோகமான தகவலால் கவனம் சிதறி பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்து விட்டார். இதையடுத்து அப்பெண்ணின் கார் கடலுக்குள் பாய்ந்தது.
இதைப்பார்த்த அப்பெண் காருக்குள் இருந்து வெளியே வந்து உதவி தண்ணீரில் மிதந்து கொண்டே உதவி கேட்டார். இதைப்பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்துக்கு கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் நீர்மூழ்கி வீரர்களுடன் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் கடலுக்குள் சென்று, அந்த பெண்ணை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர்.
கடலுக்குள் மிதந்த காரையும் கிரேன் மூலம் தூக்கி வெளியில் கொண்டு வந்தனர். மேலும் கடற்கரை அருகே செல்லும்போது பொதுமக்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- திருப்பூரில் பரபரப்பு: அலைபாயுதே பாணியில் 'திருமணம்'... காதல் கணவர் 'ஏற்க' மறுத்ததால்... விபரீத முடிவெடுத்த இளம்பெண்!
- 'கடைசியாக' முகத்தை பார்க்க... கண்ணீருடன் 'வெள்ளை' உடையில் வந்த ரியா... 'விசாரணை' வளையத்திற்குள் கொண்டு வந்த போலீஸ்!
- 'போலி இ-பாஸ்' ரெடி செய்யும் 'கும்பல்...' 'நம்பி ஏமாந்து விடாதீர்கள்...' 'ட்ரை பண்ணா' இதுதான் 'நடக்கும்...'
- ஆங்காங்கே தூவப்பட்ட 'மிளகாப்பொடி'... பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட உடல்... 'தேனி'யை அதிரவைத்த கொலை!
- “ஆம்பளன்னா சுடுங்க பாப்போம்!”.. 'போலீசுக்கும் டாக்டருக்கும்' நடந்த வாக்குவாதம்!.. சோதனைச்சாவடியில் நடந்த பரபரப்பு 'சம்பவம்'.. 'வீடியோ'!
- ரகசியமாக நடந்த 'திருமண' ஏற்பாடுகள்... கடைசி நேரத்தில் வராமல் போன 'காதலன்'... அடுத்தடுத்த மரணங்களால் 'அதிர்ந்து' போன ஈரோடு!
- சுஷாந்த் சிங்குக்கு' நிதிப் பிரச்னை இருந்ததா?... 'வீட்டின்' மாத வாடகை 'ரூ. 4.51 லட்சம்...' 'புதிய கோணத்தில்' விசாரிக்கும் 'போலீசார்...'
- அமெரிக்காவில் மறுபடியும் போலீசாரால் ‘கருப்பின’ வாலிபருக்கு நடந்த அதிர்ச்சி.. ‘விஸ்வரூபம்’ எடுத்த போராட்டம்..!
- போன் பண்ணா 'சுவிட்ச்' ஆஃப்னு வருது... 277 கொரோனா நோயாளிகளை 'காணோம்'... போலீஸ்க்கு போன அதிகாரிகள்!
- கொரோனா 'நோயாளி' சொல்லி தப்பிச்சேன் ஆனா... 'அந்த' விஷயத்துல கோட்டை விட்டுட்டேன்... 'மீன் குழம்பு' திருடன் சிக்கிய பின்னணி!