அம்மாடியோவ்...! மலைக்க வைக்கும் ‘ஜீவனாம்ச’ தொகை.. முன்னாள் மனைவி தொடுத்த வழக்கில் ‘துபாய்’ மன்னருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

துபாய் மன்னர் அவரது மனைவியை விவாகரத்து செய்த வழக்கில் மனைவிக்கு மலைக்க வைக்கும் தொகையை ஜீவனாம்சமாக கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertising
>
Advertising

துபாய் அரசர் சேக் முகம்மது பின் ரஷித் அல்- மாக்டோம் (Sheikh Mohammed bin Rashid Al Maktoum), கடந்த 2004-ம் ஆண்டு ஹயா பின்ட் அல் ஹூசைன் (Haya Bint Al Hussein) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

இதனை அடுத்து ஹயா பின்ட் அல் ஹூசைன், தனது குழந்தைகளுடன் பெர்லின் நகருக்கு குடிபெயர்ந்து விட்டார். அங்கு தனது கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், துபாய் அரசர் சேக் முகம்மது பின் ரஷித் அல்- மாக்டோம் அவரது மனைவிக்கு 5,500 கோடி ரூபாயை ஜீவனாம்சமாக தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

அதில் 2516 கோடி ரூபாயை அடுத்த 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இரண்டு பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு ஆகும் செலவையும் துபாய் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரிட்டிஷ் நீதிமன்ற வரலாற்றிலேயே அதிகமாக ஜீவனாம்சம் கொடுக்க சொல்லி வெளியான உத்தரவு இதுதான் என கூறப்படுகிறது.

DUBAIRULER, DIVORCE, EXWIFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்