'விமானத்திலிருந்து இறங்கியதும் மொபைலுக்கு வந்த மெசேஜ்'... 'அந்த இடத்திலேயே அலறிய இளம்பெண்'... 'ஓடி வந்த அதிகாரிகள்'... நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்எந்த ஒரு பெண்ணுக்கும் எனக்கு நடந்தது போல நடக்கக் கூடாது எனக் கதறித் துடித்துள்ளார் மேரி.
இங்கிலாந்தைச் சேர்ந்த இளம்பெண் மேரி. இவர் துபாயில் கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வருகிறார். பணி காரணமாக மேரி அங்கேயே இருந்துவிட்ட நிலையில், அவரது பெற்றோர் மட்டும் இங்கிலாந்தில் வசித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் மேரியின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் மேரிக்கு வந்தது. இதனால் தனது அம்மாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அவர் இங்கிலாந்திற்குப் புறப்படத் தயாரானார்.
அதே நேரத்தில் கடந்த 4 வருடங்களாக அவர் தனது பெற்றோரைப் பார்க்காத நிலையில், தற்போது அவர்களைக் காணச் செல்வதால் மிகுந்த ஆசையுடன் இருந்தார். இதையடுத்து விமானத்தில் இங்கிலாந்து வந்திறங்கிய மேரி, பாதுகாப்பு சோதனைகளை முடித்துவிட்டு தனது செல்போனை ஆன் செய்துள்ளார். அப்போது அவரது மொபைலுக்கு வந்த மெசேஜை பார்த்த மேரியின் இதயம் சுக்குநூறாக நொறுங்கிப் போனது.
அவருக்கு வந்த குறுஞ்செய்தியில், மேரியின் தாய் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இறந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்ததும் மேரி அதே இடத்திலேயே கதறி அழுதார். மேரியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த அதிகாரிகள் ஏதாவது அசம்பாவித சம்பவம் நடந்து விட்டதோ என ஓடி வந்தனர். இதையடுத்து நடந்த விவரங்களைக் கேட்ட அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்தினார்கள்.
இதனை தொடர்ந்து அம்மாவை உயிருடன் தான் பார்க்க முடியவில்லை, அவரது முகத்தையாவது பார்க்கலாம் என அவரது வீட்டிற்குக் கிளம்ப மேரி தயாரானார். அப்போது இன்னொரு செய்தி இடியாக வந்தது. மேரி துபாயிலிருந்து வந்த நிலையில், துபாய், இங்கிலாந்தில் சிவப்பு பட்டியலில் இருப்பதால் மேரி 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதன் பிறகு தான் அவர் தனது வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
4 வருடங்கள் கழித்து அம்மாவைப் பார்க்க வந்தால், அவரை உயிருடன் பார்க்க முடியவில்லை. இதனால் இறுதியாக அவரது முகத்தையாவது பார்க்கலாம் என மேரி நினைத்த நிலையில் அதுவும் நடக்காமல் போக, மேரி தற்போது பைத்தியம் பிடித்தது போல ஆகி விட்டார். தனிமைப்படுத்துதல் விதியின் படி, மேரி ஏப்ரல் 12ம் தேதிக்குப் பின்னர் நேரடியாகத் தனது தாயின் இறுதிச் சடங்கிற்கு மட்டுமே செல்ல முடியும்.
இதனால் கடைசி வரை மேரியால் அவரது தாயின் முகத்தைப் பார்க்க முடியாமல் போயுள்ளது. இதனால் ஜூம் வழியாகத் தாயின் இறுதிச் சடங்கை ஒழுங்கு செய்வதில் தனது தந்தைக்கு உதவி வருகிறார். இதில் இன்னொரு சோகம் என்னவென்றால், மேரியின் தந்தை தான் பல கிலோ மீட்டர் தூரம் காரை ஓட்டி வந்து மேரியை அவரது தாயின் இறுதிச் சடங்கிற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
எனது வயதான தந்தை தாயின் இறுதிச் சடங்கு காரியங்களைச் செய்வாரா அல்லது பல கிலோ மீட்டர் என்னை அழைத்து வர காரில் வருவாரா Zஎன கடும் கோபத்தில் இருக்கிறார் மேரி. இங்கிலாந்து நாட்டின் மீது எனக்குக் கோபம் வருகிறது. இன்னொரு முறை இங்கு வர எனக்கு விருப்பம் இல்லை எனக் கோபத்தோடு தெரிவித்துள்ளார் மேரி.
இதற்கிடையே இரக்கத்தின் அடிப்படையில் மேரியை தனிமைப்படுத்துதலில் இருந்து விடுவிக்க வேண்டி சுகாதார செயலாளருக்கு மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை மனுக்களுக்கு இதுவரை பதில் எதுவும் வரவில்லை. என்ன பெண்ணுக்கும் எனக்கு வந்த நிலைமை வரக் கூடாது என மேரி உருக்கத்துடன் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘வேகமாக பரவும் கொரோனா 2-வது அலை’!.. ‘அடுத்த 4 வாரம் மிகவும் நெருக்கடியானதாக இருக்கும்’.. மத்திய சுகாதாரத்துறை ‘முக்கிய’ தகவல்..!
- 'திடீரென வாக்குச்சாவடியில் தொற்றிய பரபரப்பு'...'வாக்கு சாவடிக்குள் வந்த ஆம்புலன்ஸ்'... 'பிபிஇ கிட் உடையணிந்து இறங்கிய 'கனிமொழி'!
- 'போற போக்க பார்த்தா... வட்டிக்கு வாங்கி தான் ஐபிஎல் நடத்தணும் போலயே'!.. இது சரிபட்டு வராது!.. ஐபிஎல் நல்லா நடக்கணும்னா... மொதல்ல 'இத' பண்ணுங்க!!
- ‘வேற வழியே இல்ல’!.. நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மகாராஷ்டிரா முதல்வர் ‘அதிரடி’ அறிவிப்பு..!
- ‘இன்னும் 5 நாள்தான் இருக்கு, அதுக்குள்ள RCB-க்கு வந்த சிக்கல்’!.. தீவிர ஆலோசனையில் கேப்டன் கோலி..!
- 'யாரு கண்ணு பட்டுச்சோ... சென்னை அணிக்கு அடி மேல அடி விழுது!.. ரசிகர்களை கலக்கமடையச் செய்த சம்பவம்'!.. 'போன வருஷமே நிறைய இழுந்துட்டோம்'!
- 'நான் உங்கள பயமுறுத்தல'... 'ஊரடங்கு இல்லைன்னுசொல்ல முடியாது, ஆனா'... உத்தவ் தாக்கரே வைத்திருக்கும் ட்விஸ்ட்!
- ‘கவனமாக இருங்க’!.. ‘நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்’.. சச்சின் டெண்டுல்கர் திடீர் அறிவிப்பு..!
- ‘அந்த லிஸ்ட்ல தமிழ்நாடு இல்ல’!.. ‘யாரும் வீண் வதந்தியை பரப்பாதீங்க’.. சுகாதாரத்துறை செயலாளர் முக்கிய தகவல்..!
- ‘4 நாளா காய்ச்சல்’.. ‘இப்போ எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கு’!.. இந்திய மகளிர் டி20 கிரிக்கெட் கேப்டன் ட்வீட்..!