VIDEO: 'விலையுயர்ந்த கார்ல கூடு கட்டிய பறவை...' அதானாலென்ன இப்போ...! 'அவங்க சந்தோசமா வாழட்டும்...' அதுக்காக என்னெல்லாம் பண்ணிருக்கார் பாருங்க...? துபாய் இளவரசரின் இரக்க குணம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்பறவைகள் கூடு கட்டி வாழ்வதற்காக தனது விலை உயர்ந்த காரை கொடுத்த துபாய் இளவரசருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
துபாயின் பட்டத்து இளவரசராக பதவி வகிப்பவர் ஷேக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் ஆவார். இவருக்கு எப்போதும் பறவைகள், விலங்கினங்கள் மீதும் அலாதியான அன்பு வைத்திருப்பவர். இதற்காகவே தனி மிருககாட்சி சாலையில் பல்வேறு வகையான விலங்குகளை வளர்த்து வருகிறார்.
மேலும், இவர் சமூக வலைத்தளங்களில் பல்வேறு உயிரினங்களுடன் இணைந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளியிடங்களுக்கு செல்வதை இளவரசர் தவிர்த்து வந்தார். ஆகையால் அவரது வாகனங்கள் வெகுநாட்களாக பயன்படுத்தாமல் காணப்பட்டது.
தற்போது வெகுவாக பயன்படுத்தி வரும் கருப்பு நிற மெர்சிடஸ் வாகனத்தின் முகப்பு பகுதியில் சிறு பறவை ஒன்று கூடு கட்டி முட்டையிட்டது.
பின்னர் அங்கேயே அடைகாக்க ஆரம்பித்தது. இதனை கண்ட இளவரசர் அந்த வாகனத்தை பயன்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டார்.
மேலும் கூட்டை கலைக்கும் வண்ணம் யாரும் அந்த வாகனத்தை சுற்றி செல்ல கூடாது என்பதற்காக எச்சரிக்கை செய்யும் விதமாக சிவப்பு வண்ணத்திலான டேப்பை நாற்புறமும் சுற்றி வைத்துள்ளார்.
பறவை தனது முட்டைகளை இன்னும் அதில் அடைகாத்து வருகிறது. ஒரு சிறு பறவைக்காக தனது காரையே அளித்த இளவரசரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரைலாகி வருகிறது.
அவரின் இரக்க குணத்தை அனைவரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அவங்க ஊருக்கு போய் சந்தோஷமா இருக்கட்டும்ங்க"... '61' இந்தியர்களின் ஃபிளைட் டிக்கெட்டிற்கு உதவி செய்த 'தொழிலதிபர்'... மனதை உருக வைக்கும் 'காரணம்'!!!
- 'இப்போ எங்க நாட்டுல யாருக்கும் கொரோனா கிடையாது...' 'கடைசி நோயாளியையும் குணப்படுத்தி அனுப்பியாச்சு...' கெத்து காட்டிய நாடு...!
- இரவில் கதவை உடைத்து... இந்திய தம்பதி கொடூரக் கொலை!.. பாகிஸ்தானியர் கைது!.. துபாயில் அரங்கேறிய மர்மத்தின் பின்னணி என்ன?
- 'அவர் முகத்த ஒரு தடவ எனக்கு காட்டுங்களேன்...' 'கதறிய மனைவிக்கு கடைசியில...' கணவர் இறந்து போன விஷயமே இப்படி தான் தெரிஞ்சுருக்கு...!
- ‘கேரளாவிலேயே மிகப் பெரிய பங்களா’... ‘துபாயைக் கலக்கிய இந்திய தொழிலதிபர் எடுத்த துயர முடிவு’... ‘போலீசார் தந்த அதிர்ச்சி தகவல்’!
- 'எங்க புள்ளைய கடைசியா ஒரு தடவ'... கேரளாவில் நடந்த மகனின் இறுதிச்சடங்கு... ஃபேஸ்புக்கில் பார்த்து கதறித்துடித்த பெற்றோர்!.. மனதை நொறுக்கிய துயரம்!
- 'கொரோனாவால்' வருமானத்தை இழந்து நின்ற 'நண்பர்களை'... மகிழ்ச்சியின் 'உச்சத்திற்கு' கொண்டு சென்ற 'ஜாக்பாட்!'...
- ‘இது ஒரு பாடம்’... ‘திடீரென உடைந்த கட்டமைப்பு’... ‘வெறுப்பூட்டும் அனுபவம்’... ‘மீண்டு வந்த இளவரசர் பகிரும் உருக்கமான வீடியோ’!
- ‘திருமண’ நாளன்று அதிர்ச்சியில் ‘உறைய’ வைத்த அழைப்பு... ‘வீடியோ’ காலில் பார்த்து ‘கதறிய’ மனைவி... ‘கலங்கவைக்கும்’ சம்பவம்...
- ‘அரச குடும்பத்திலும் கொரோனா பாதிப்பு’... ‘இங்கிலாந்து இளவரசருக்கு’... ‘வெளியான அரண்மனை அறிக்கை’!