காணாமல் போன 'மனைவி'யின் கிரெடிட் கார்டு... 'திருவிழா'வில் காணாமல் போனவரை போல முழித்த கணவர்... போலீசாரிடம் சிக்கிய பெண் அளித்த அல்டிமேட் 'பதில்'!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

துபாய் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது க்ரெடிட் கார்டில் இருந்து பணம் சென்று கொண்டே இருப்பது குறித்து புகாரளித்த நிலையில், உண்மையான காரணம் என்ன என்பது தெரிய வந்த போது அதிர்ச்சியின் உச்சிக்கே அவர் சென்றுள்ளார்.

முன்னதாக, அந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து பண பரிமாற்றம் செய்யப்பட்டு வருவதாக தொடர்ந்து பல மெசேஜ்கள் அவரது மொபைல் எண்ணிற்கு வந்துள்ளது. இதனால், உடனடியாக தனது வங்கிக்கு அழைத்த பெண், தனது கார்டு தொலைந்து போயிருக்கும் என நினைத்து கார்டை பிளாக் செய்துள்ளார். மேலும், தனது வங்கி கணக்கை யாராவது ஹேக் செய்திருக்கலாம் என்றும் அவர் அஞ்சியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, போலீசாரிடம் புகாரளிக்கப்பட்ட நிலையில், இவரது வங்கிக்கணக்கை பயன்படுத்தி வேறொரு பெண் அவரது டிராபிக் அபராதங்கள் மற்றும் இதர செலவுகளுக்கு பணத்தை செலவழித்து வந்தது போலீசார் விசாரணையில் தெரிந்தது. இதனால் அவரது கார்டு ஹேக் செய்யப்படவில்லை என உறுதியான நிலையில், போலீஸ் விசாரணையின் போது கார்டை பயன்படுத்திய பெண் அழைத்து வரப்பட்டார்.

அதன்பிறகு, வங்கிக் கணக்கை பயன்படுத்திக் கொண்ட பெண் தெரிவித்த கருத்து, கார்டின் உரிமையாளரான முதல் பெண்ணிற்கு தலையில் இடி வந்து விழுவது போல இருந்தது. தனது கணவரின் காதலியான அந்த பெண்ணிற்கு அந்த கணவரே மனைவியின் க்ரெடிட் கார்டு மூலம் டிராபிக் அபராதங்கள் உட்பட பலவற்றிற்கு பணம் செலுத்தியுள்ளது தெரிய வந்தது.

அது மட்டுமில்லாமல், தனது கணவருக்கு  வேறொரு காதலி இருப்பது அந்த பெண்ணிற்கு தெரியாத நிலையில், அந்த காதலிக்கும் அவரது காதலருக்கு ஏற்கனவே திருமணமான விஷயம் தெரியாமல் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக, போலீசார் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்