"இவரை கண்டுபிடிச்சு கூட்டிட்டு வாங்க".. துபாய் இளவரசர் போட்ட பதிவு.. அதிகாரிகளே மிரண்டு போய்ட்டாங்க.. அப்படி என்ன நடந்துச்சு?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

துபாயில் இளைஞர் ஒருவரை கண்டுபிடித்து தன்னிடம் அழைத்துவரும்படி இளவரசர் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், அவர் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் அவரை சந்திக்க இருப்பதாகவும் இளவரசர் தெரிவித்திருக்கிறார். இதற்கான காரணம் தான் பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | வானத்துல இருந்து விழுந்த ராட்சத மெஷின்.. ஆடு மேய்க்கப்போன குடும்பத்துக்கு காத்திருந்த ஷாக்.. ஆராய்ச்சியாளர்கள் சொன்ன பகீர் தகவல்.!

ஷேக் ஹம்தான்

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்-ன் மூத்த மகன் தான் ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம். இவர் துபாயின் பட்டத்து இளவரசராகவும் துபாய் நிர்வாக கவுன்சிலின் தலைவராகவும் இருக்கிறார். பொதுமக்களிடத்தில் எப்போதும் அன்பாக பழக்கூடியவரான ஹம்தான் சமூக வலை தளங்களிலும் துடிப்புடன் இயங்க கூடியவர். சாகச பிரியரான இவர் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா மீது ஏறி செல்பி எடுப்பது, ஆழ்கடலில் நீச்சலடித்து போன்றவற்றை செய்வது மட்டுமல்லாமல் அந்த புகைப்படங்களை சமூக வலை தளங்களிலும் வெளியிடுவார். இதனாலேயே இவருக்கு பல மில்லியன் கணக்கில் ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள்.

வீடியோ

இந்நிலையில், ஷேக் ஹம்தான் சில தினங்களுக்கு முன்னர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் சாலையில் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நபர் ஒருவர் சாலை ஓரத்தில் நிற்கிறார். வாகன வரத்து நின்றவுடன், சாலை மையத்தில் கிடந்த இரு பெரிய கற்களை தூக்கிக்கொண்டு சாலை ஓரத்தில் போடுகிறார் அவர் அதன் பின்னர் தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு அந்த நபர் கிளம்புகிறார்.

இளவரசர் இந்த வீடியோவை பகிர்ந்து,"துபாயில் நற்செயல்கள் பாராட்டப்பட வேண்டும்" எனக்குறிப்பிட்டு அவரை கண்டுபிடித்துத்தரும்படி கோரிக்கையும் வைத்திருந்தார். இந்நிலையில் இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் சென்றிருக்கிறது. கொஞ்ச நேரத்தில் அந்த இளைஞரை கண்டுபிடிக்கும் பணியில் மூத்த அதிகாரிகள் ஈடுபட்டதாக தெரிகிறது.

 

பாராட்டு

அதன்பலனாக அந்த இளைஞர் பெயர் அப்துல் கஃபூர் என்பது தெரியவந்திருக்கிறது. உடனடியாக அந்த இளைஞருக்கு போன் செய்து பேசிய இளவரசர் அவருடைய செயலுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, தற்போது தான் வெளிநாட்டில் இருப்பதாகவும் விரைவில் நாடு திரும்பியவுடன் அவரை சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனால் அப்துல் பெருமகிழ்ச்சியில் உள்ளார். இதனிடையே அந்த இளைஞரின் புகைப்படத்தையும் இளவரசர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

 

Also Read | இதுவரை இப்படி ஒன்ன யாரும் பார்த்திருக்க மாட்டாங்க.. "ஒரே போட்டோ-ல 100 மில்லியனுக்கும் அதிகமான நட்சத்திரம்" .. நாசா வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்..!

DUBAI MAN, SHEIKH HAMDAN, RESCUE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்