"எங்க ஊருக்கு விமானத்தை திருப்புங்க".. கோபத்துல இளைஞர் செஞ்ச காரியம்.. பரபரப்பான ஏர்போர்ட்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

டெல்லி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் விமான நிலையமே சற்று நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

Advertising
>
Advertising

                         Images are subject to © copyright to their respective owners.

Also Read | ராத்திரியில செல்போனுக்கு சார்ஜ் போட்ட இளைஞர்.. திடீர்னு கேட்ட அலறல் சத்தம்... பதறிப்போன நண்பர்கள்..!

சமீப வாரங்களில் வட மாநிலங்களில் கடுக்கும் குளிர் நிலவிவருகிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வானிலை மோசமடைந்ததன் காரணமாக விமான சேவையும் அவ்வப்போது பாதிப்பை சந்தித்துவருகிறது.  இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு வந்த விமானம் வானிலை மோசமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து டெல்லியில் அவ்விமானத்தை தரையிறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

அந்த விமானத்தில் பயணித்த 29 வயது இளைஞர் ஒருவர் இதனால் விமான பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனையடுத்து, அவரை பணியாளர்கள் சமாதானம் செய்திருக்கின்றனர். ஆனாலும், கோபத்தில் இருந்த அந்த இளைஞர் விமானம் கடத்தப்பட்டு விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதி இருக்கிறார். மேலும், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவையும் தன்னுடைய பதிவில் டேக் செய்திருக்கிறார் அந்த இளைஞர்.

இதனையடுத்து உயர்மட்ட அதிகாரிகளுக்கு தகவல் செல்ல, விமானம் உடனடியாக டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதன் பின்னர் ஒவ்வொரு பயணியையும் பாதுகாப்பாக அழைத்துச் சென்ற அதிகாரிகள், விமானம் கடத்தப்பட்டதாக ட்வீட் செய்த இளைஞரை கைது செய்திருக்கின்றனர். அவருடைய பெயர் மோதி சிங் ரத்தோர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners.

இதுகுறித்து பேசிய விமான நிலைய டிசிபி ரவி குமார் சிங், “ரத்தோர் விமானத்தில் இருந்து இறங்கியவுடன் ஊழியர்கள் அவரை எங்களிடம் ஒப்படைத்தனர். அவர் குறித்து எங்களுக்கு புகார் வந்துள்ளது. அவர் மீது IPC பிரிவுகள் 341, 505 (1) (b) மற்றும் 507 ஆகியவற்றின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது." என்றார். இந்நிலையில் தற்போது ரத்தோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் விமான நிலையமே சற்று நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

Also Read | எதிர்ப்பை மீறி குஜராத் பெண்ணை மணந்த தமிழக இளைஞர்... திரைப்பட பாணியில் பெண் வீட்டார் செய்த பரபரப்பு சம்பவம்.!!

DUBAI ENGINEER, FLIGHT, DELHI, ARREST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்