வரலாறு காணாத வறட்சி.. தண்ணீருக்கு வெளியே வந்த 3,400 ஆண்டுகள் பழமையான நகரம்.. அதிர்ந்துபோன ஆராய்ச்சியாளர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஈராக் நாட்டில் வறட்சி காரணமாக தண்ணீர் வற்றியதில் 3,400 ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய நகரம் வெளியே வந்திருப்பது ஆராச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வறட்சி
மத்திய கிழக்கு நாடான ஈராக்கில் கடந்த வருடம் முதல் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக போதிய தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் மிகப்பெரிய அணைக்கட்டான மொசூலில் தண்ணீர் இருப்பு கணிசமான அளவில் குறைந்துள்ளது. இதன் காரணமாக தண்ணீருக்குள் இருந்த பழமையான சிதைந்த நகரம் வெளியே தெரிகிறது.
எகிப்து நாட்டை துட்டன்காமன் ஆட்சி செய்த காலத்தில் இந்த நகரம் செழிப்புற்று இருந்திருக்கலாம் என்கிறார்கள் இந்தப் பகுதியை ஆய்வு செய்துவரும் நிபுணர்கள்.
முக்கிய நகரம்
வெண்கல காலத்தின்போது, தற்போதைய ஈராக் மற்றும் சிரியாவின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு இந்த நகரம் முக்கிய நகரமாக இருந்திருக்கலாம் எனக்கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், இது மித்தானி ராஜ்யத்தின் ஒருபகுதியாக இருந்திருக்கக்கூடும் என்கிறார்கள்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒரு சேமிப்பு வளாகம், தொழில்துறை கட்டிடம் மற்றும் கோட்டைகள் உட்பட ஒரு பெரிய நகரத்தின் பகுதிகளை ஆய்வுக் குழு கண்டறிந்தது. அங்கே ஆயிரம் ஆண்டுகள் பழமையான எழுத்துக்களான கியூனிஃபார்ம்-ல் எழுதப்பட்ட மண்பானைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
கிமு 1350 இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நகரம் அழிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இதனால் மண்ணுக்குள் நகரம் மூழ்கிப்போனது. அதன்மேலே தண்ணீர் பாய்ந்தாலும் ஆச்சரியப்படும் வகையில் உள்ளே இருந்த நகரத்தின் சுவடுகள் அப்படியே இருந்திருக்கின்றன.
அரண்மனை
2018 இல் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக இந்த இடத்தில் ஒரு அரண்மனை இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். பின்னர் அது தண்ணீரில் மூழ்கியது. ஆகவே, எஞ்சியுள்ள பகுதிகளை வெள்ளத்தில் இருந்து காக்க, பல்வேறு திட்டங்களை எடுத்துவருகிறது ஆய்வுக்குழு.
1980 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மொசூல் அணை, அந்நாட்டின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாகும். இதற்கடியில் புதைந்துள்ள நகரம் குறித்த ஆய்வு உலக சரித்திரத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
Also Read | மாப்பிள்ளை இல்லாமல் கல்யாணமா..? இளம்பெண் எடுத்த வினோத முடிவு.. இந்தியாவுல இப்படி ஒரு திருமணமா.?
மற்ற செய்திகள்