அதிக 'தண்ணீர்' குடிப்பதால் நீர் பற்றாக்குறை ... 10 ஆயிரம் 'ஒட்டகங்களை' பறந்துபறந்து சுட்டுக்கொல்ல முடிவு...!
முகப்பு > செய்திகள் > உலகம்தெற்கு ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் ஃபெரல் வகை ஒட்டகங்கள், மிக அதிகளவில் தண்ணீர் குடித்து மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் அவற்றை சுட்டுக்கொல்லும் முடிவை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது. கடுமையான வறட்சி காலங்களில் மனிதர்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்து தண்ணீரை ஒட்டகங்கள் குடித்துவிடுவதாகவும் புகார் உள்ளது. இதன் காரணமாக அவற்றை கொல்ல அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதன்படி, சுமார் 10 ஆயிரம் ஃபெரல் ஒட்டகங்களை சுட்டுக்கொல்லவுள்ளனர். சுடுவதில் தேர்ந்த நபர்களைக் கொண்டு ஹெலிகாப்டர்களில் பறந்தபடி ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒட்டகங்களின் கழிவுகள் ஒரு டன் கார்பன்டை ஆக்சைடுக்கு நிகரான, மீத்தேன் வாயுவை உருவாக்குவதாக கூறப்படுகிறது. இது புவி வெப்பமயமாதலுக்கு ஒரு காரணமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
முன்னதாக, ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் 3 மாதங்களாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. இதனால் ஏரளானமான வனவிலங்குகள் உடல் கருகி உயிரிழந்துள்ளன. அத்துடன் லட்சக்கணக்கான மரங்களும் எரிந்திருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் வனவிலங்குகள் இறந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு சோகத்தை ஏற்படுத்தியது. இத்தகைய சூழ்நிலையில், தண்ணீரை அதிக அளவில் குடிப்பதாக கூறி ஒட்டகங்களை கொல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “ஒரு மாதமாக தீராப் பணி்!”.. “இப்படி ஒரு காட்டுத்தீயை பார்த்ததே இல்லை”.. “அப்பா அழுதார்”.. உருக்கும் பதிவு!
- அப்பாவின் உயிர் தியாகம் அறியாத... 19 மாத குழந்தை... தந்தையின் இறுதிச் சடங்கில்... மனதை உருக்கிய சம்பவம்!
- ‘இந்த ஒருநாள் டீமுக்கு நம்ம தோனிதான் கேப்டன்’..! வெளியான ‘வெறித்தனமான’ லிஸ்ட்..!
- 'என்ன மீறி'.. 'ஏடிஎம் மானிட்டர்ல கைவெச்சுருவீங்களா?'.. 'பணத்தை எடுத்துருவீங்களா?'.. பொதுமக்களை அலறவிட்ட 'பரபரப்பு' சம்பவம்!
- ‘ஆட்டமிழந்த விரக்தியில் பிரபல வீரர் செய்த காரியம்’.. ‘காயத்தால் அடுத்த போட்டியில் விளையாடுவதில் சிக்கல்’..
- 'கல்யாணம்' ஆகலேன்னா 'தயவுசெஞ்சு' இத படிக்காதீங்க.. 'செம' காதல்.. 73 வயது 'தாத்தா'வை மணக்கும் இளம்பெண்!
- விடாதே..அப்டித்தான்..நண்பனின் மகிழ்ச்சிக்காக.. இளைஞர் செய்த கொடூரம்!
- 'ஏய்.. என்ன பண்ற?'.. 'ஆத்திரமடைந்த பெண்'.. 'அதுக்காக இப்படியா?'... 'பரிதாப கதியில்' ஒட்டகம்!
- ‘விதியை மீறிய கிரிக்கெட் பிரபலம்’... ‘கார் ஓட்ட ஓராண்டு தடை’
- 'தலைக்கு நேரா அசுர வேகத்தில் வந்த பந்து'.. 'நூலிழையில் தப்பிய வீரர்' வைரலாகும் வீடியோ..!