விண்வெளில இருந்து பூமிக்கு அனுப்பப்பட்ட கேப்ஸ்யூல்.. உலக நாடுகள் எல்லாம் இதுக்காக தான் வெயிட்டிங்.. அப்படி உள்ள என்னதான் இருக்கு.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் கேப்ஸ்யூல் பூமிக்கு திரும்பியுள்ளது. இதில் உள்ள பொருட்கள் அனைத்தும் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட இருக்கின்றன.

Advertising
>
Advertising

Also Read | 'Vacation க்கு இங்க போகணும்னு ஆசை".. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த அட்டகாசமான வீடியோ.. அடடா இதான் காரணமா.?

ஸ்பேஸ் எக்ஸ்

உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் இந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். செவ்வாய் கிரக ஆராய்ச்சி, உலக மக்களுக்கு குறைவான கட்டணத்தில் இணைய சேவை வழங்கிடும் ஸ்டார்லிங் திட்டம் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு முக்கிய திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவுடன் இணைந்து பல முக்கிய திட்டங்களில் பணியாற்றிவருகிறது ஸ்பேஸ் எக்ஸ்.

அந்த வகையில், விண்வெளியில் அமைக்கப்பட்டிருக்கும் சர்வதேச ஆராய்ச்சி மையத்துக்கு தேவையான ஆய்வு பொருட்களை எடுத்துச் செல்லும் பணிகளுக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் கேப்ஸ்யூல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 25 வது முறையாக கடந்த ஜூலை மாதத்தில் இந்த கேப்ஸ்யூல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.

ஜூலை 16 ஆம் தேதி விண்ணுக்கு ஏவப்பட்ட இந்த கேப்ஸ்யூல் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றது. அதனை தொடர்ந்து கடந்த 19 ஆம் தேதி விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள பொருட்களுடன் பூமியை நோக்கிய தனது பயணத்தினை ஆரம்பித்தது இந்த கேப்ஸ்யூல். 1,814 கிலோ (4,000 பவுண்டுகளுக்கு மேல்) எடைகொண்ட ஆய்வு பொருட்களுடன் கடந்த 19 ஆம் தேதி இரவு 8.35 மணிக்கு இந்த கேப்ஸ்யூல் விடுவிக்கப்பட்டது. சுமார் 28 மணி நேர பயணத்துக்கு பிறகு புளோரிடா கடற்கரையில் கேப் கனாவெரலுக்கு வடக்கே இந்த கேப்ஸ்யூல் விழுந்தது.

ஆராய்ச்சி

இதில் உள்ள பொருட்களை கொண்டு பல்வேறு ஆராய்ச்சிகளை முன்னெடுக்க இருக்கின்றனர் ஆய்வாளர்கள். பொருட்களின் மீது விண்வெளி பயணம் ஏற்படுத்தும் தாக்கம், விண்வெளி உடையை குளிர்வித்தல், விண்வெளியில் செல்கள் இயங்கும் விதம் ஆகியவை பற்றி ஆய்வுகள் நடைபெற இருக்கின்றன. செல்கள் குறித்த ஆய்வுகளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு முகமை நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து டிராகன் கேப்ஸ்யூல் தனது பயணத்தை துவங்கும் வீடியோவை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | ஒரு ஆயுள் மற்றும் 375 வருஷம் சிறை தண்டனை.. அமெரிக்காவையே நடுங்க வச்ச சம்பவம்.. நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு.. முழுவிபரம்..!

DRAGON SPLASHES, SPACEX DRAGON SPLASHES, DRAGON SPLASHES DOWN WITH SCIENTIFIC CARGO, ANALYSIS, NASA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்