‘அமெரிக்க வரலாற்றில்’... ‘சரித்திரம் படைக்க இருக்கும்’... ‘ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன்’... ‘முதல் பெண்மணிக்கு கூடும் மரியாதை’...!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், அமெரிக்காவின் வரலாற்றில் புதிய சரித்திர சாதனை ஒன்றை படைக்கவிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்நாட்டின் 46-வது அதிபராக 2021 ஜனவரி 20-ம் தேதி பதவியேற்க உள்ளார். இதனால், அவரது மனைவி ஜில் பைடன் நாட்டின் முதல் பெண்மணி அந்தஸ்தில் வெள்ளை மாளிகைக்குள் செல்லவிருக்கிறார். ஆனால் 231 ஆண்டுகால அமெரிக்க வரலாற்றில், புதிய சாதனையை படைக்கவிருக்கும் முதல் பெண்மணியாக டாக்டர் ஜில் பைடன் திகழவிருக்கிறார்.

ஜில் பைடன் வெள்ளை மாளிகைக்குள் இருந்து கொண்டே தனது ஆங்கில பேராசிரியர் பணியையும் தொடரவிருக்கிறார் என்பதுதான் அது. ஜில் பைடன்  இளங்கலை பட்டம் மற்றும் இரண்டு முதுகலை பட்டங்களையும், டெலாவேர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஜோ பைடன் துணை அதிபராக இருந்தபோது, நாட்டின் இரண்டாவது பெண்மணியாக ஜில் பைடன் இருந்துள்ளார்.

இரண்டாவது பெண்மணியாக, பணியாற்றும் போது அரசியல் அல்லாத, வெள்ளை மாளிகைக்கு வெளியே ஆசிரியராக வேலைப் பார்த்த முதல் நபரும் இவரே. தற்போது அமெரிக்காவின் முதல் பெண்மணியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜில் பைடனுக்கு, இனி இரட்டை வேலை இருக்கப் போகிறது. ஏனெனில் அவர் வெள்ளை மாளிகைக்குச் சென்றபிறகும் தனது ஆசிரியர் பணியை தொடர்ந்து மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக தெரிவித்துள்ள ஓஹியோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான கேத்ரின் ஜெல்லிசன், ‘வரலாற்று ரீதியாக அமெரிக்கர்கள் தங்கள் முதல் பெண்கள் வெள்ளை மாளிகையிலும் அதிபரின் பக்கத்திலும் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். ஆனால் இந்த விதியை உடைத்து நவீன முதல் பெண்மணியாக ஜில் பைடன் உருவெடுப்பார்’ என்றார். அதிபரின் மனைவி ஒரே நேரத்தில் முதல் பெண்மணியாகவும், ஊதியம் வாங்கும் பேராசிரியராகவும் இருக்க முடியும் என்பதற்கு உதாரணமாக அவர் திகழவிருக்கிறார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய ஜில் பைடன், ‘நான் வெள்ளை மாளிகைக்குள் சென்றாலும், கற்பிக்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்வேன். ஆசிரியர்களின் முக்கியத்துவத்தையும், பல்வேறு துறைகளின் முன்னேற்றத்தில் அவர்களது பங்கையும் மக்கள் அறிய வேண்டும் என நான் விரும்புகிறேன்’ என்றார். இதனால் இவர் மீதான மரியாதை இன்னும் மக்களிடையே  அதிகரித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்