‘திடீரென’ இடிந்து விழுந்த மேற்பரப்பு... ‘பயங்கர’ விபத்தில் சுரங்கத்துக்குள் சிக்கி... ‘27 பேர்’ பலியான பரிதாபம்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

காங்கோவில் நிலச்சரிவு காரணமாக தங்கச்சுரங்கத்தின் மேற்பரப்பு இடிந்து விழுந்ததில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் ஹல்ட் உலி மாகாணத்தில் உள்ள தங்கச் சுரங்கத்தில் கடந்த சனிக்கிழமை 30க்கும் மேற்பட்டோர் தங்கத் தாதுவை வெட்டி எடுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு தங்கச்சுரங்கத்தின் மேற்பரப்பு திடீரென இடிந்து விழுந்துள்ளது.

இந்த பயங்கர விபத்தில் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த அனைவரும் உள்ளேயே சிக்கியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலர் சுரங்கத்திற்குள் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ACCIDENT, DRCONGO, LANDSLIDE, GOLDMINE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்