விடைபெற்றார் 'டாக்டர்' அப்துல் காதிர் கான்...! 'தன் வாழ்க்கையே நாட்டுக்காக அர்ப்பணிச்சவரு...' 'எங்க நாடே' அவருக்கு கடமை பட்டுருக்கு...! - சோகத்தில் தவிக்கும் நாடு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த டாக்டர் அப்துல் காதிர் கான் என்பவர் பாகிஸ்தானின் பாதுகாப்பு திறனை மேம்படுத்த தன் முழு வாழ்வையும் அர்ப்பணித்துள்ளார்.

85 வயதான டாக்டர் அப்துல் காதிர் கானுக்கு வயது மூப்பு காரணமாக நுரையீரல் பாதிப்பு அதிகம் இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று (09-10-2021) இரவு உடல்நிலை மிகவும் மோசமடைந்த காரணத்தால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும்  திடீரென அவருக்கு நுரையீரல் செயலிழப்பு ஏற்பட்டு டாக்டர் அப்துல் காதிர் கான் இன்று (10-10-2021) காலை 7 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும், பாகிஸ்தான் மக்களுக்கும் பெரும் இழப்பாக கருதப்படுகிறது. இதுகுறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் பர்வேஷ் கட்டாக் மற்றும் பிற மத்திய அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதில், 'டாக்டர் அப்துல் காதிர் கானின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இது நம் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் இழப்பு. தேசத்துக்கான அவர் செய்த சேவைகளை பாகிஸ்தான் என்றென்றும் கவுரவிப்பதோடு மட்டுமல்லாமல் அவருக்கு கடமைப்பட்டுள்ளது' என அமைச்சர் பர்வேஷ் கட்டாக் டிவிட்டரில் உருது மொழியில் பதிவிட்டுள்ளார்.

தற்போது உயிரிழந்துள்ள மறைந்த டாக்டர் அப்துல் காதிர் கான், பாகிஸ்தான் நட்டின் அணுசக்தி திட்டத்தின் தந்தை என போற்றப்படுபவர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்