கொரோனா 'நோயாளிகளுடன்'... மணிக்கணக்காக சாலையில் 'காத்திருக்கும்' ஆம்புலன்ஸ்கள்... 'அந்த' நாட்டுக்கே இப்டி ஒரு நெலமையா?
முகப்பு > செய்திகள் > உலகம்மருத்துவமனையில் இடமில்லை என்பதால், கொரோனா நோயாளிகளுடன் சாலையில் ஆம்புலன்ஸ்கள் காத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலக நாடுகளை இஷ்டத்துக்கு ஆட்டிப்படைக்கும் கொரோனா தற்போது ரஷ்யாவிலும் தன்னுடைய ஆட்டத்தை தொடங்கி இருக்கிறது. அங்கு இதுவரை 15570 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், 130 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரஷ்யாவின் மாஸ்கோ நகரத்தில் கொரோனா நோயாளிகளுடன் ஆம்புலன்ஸ்கள் மணிக்கணக்காக சாலையில் காத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உலக நாடுகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உச்சகட்டமாக 15 மணி நேரத்திற்கும் அதிகமாக நோயாளியுடன் காத்திருப்பதாக ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.
ரஷ்ய அதிபரின் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து, ''மாஸ்கோவில் உள்ள மருத்துவமனைகள் தற்போது மிகவும் கடினமான சூழ்நிலையை சந்தித்து வருகிறது. மருத்துவமனைகள் அனைத்தும் அவசர நிலையில் உள்ளன,'' என தெரிவித்து இருக்கிறார். ஆனால் மாஸ்கோ நகர மேயர், '' நாங்கள் இன்னும் உச்சநிலையை எட்டவில்லை. பாதிக்கும் கீழே தான் இருக்கிறோம். அதனால் எங்களை தயார்படுத்திக்கொள்ள முடியும்,'' என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
இதற்கிடையில் மாஸ்கோ நகரில் மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றை ரஷ்யா துரிதகதியில் கட்டி வருகிறது. மேலும் ரஷ்யா முழுவதும் சுமார் 18 மருத்துவமனைகளை கட்டி வருகிறது. போதிய மருத்துவமனைகள் இல்லாததாலும், நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாலும் அடுத்த 2,3 வாரங்கள் ரஷ்யாவுக்கு மிகுந்த கடினமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஆயிரக்கணக்கில்' பாதிக்கப்பட்டுள்ள 'மருத்துவ' பணியாளர்கள்... 'அச்சம்' தரும் எண்ணிக்கையால்... உலக சுகாதார நிறுவனம் 'கவலை'...
- 'இந்தியா'வுக்கு 100 மதிப்பெண்கள் வழங்கிய... 'ஆக்ஸ்போர்டு' பல்கலைக்கழகம்... 'எதற்காக' தெரியுமா?
- “லாக்டவுன்ல எங்க போறீங்க?”.. கேள்வி கேட்ட போலீஸாரின் கையை துண்டித்த கும்பல்.. நடுங்கவைக்கும் சம்பவம்!
- இந்தியாவில் 'லாக் டவுன்' இல்லையென்றால்... தற்போதைய 'நிலவரம்' என்னவாக இருந்திருக்கும்?... வெளியாகியுள்ள 'ஷாக்' ரிப்போர்ட்...
- ”ஐம் ஆல்ரைட் மக்களே!”.. கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்!
- ‘தமிழகத்தில் 1173 பேருக்கு கொரோனா!’.. 11 பேர் பலி.. சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவிப்பு!
- 'எந்தெந்த' விலங்குகளை 'இனி' இறைச்சிக்காக வளர்க்கலாம்?... 'சீனா' வெளியிட்டுள்ள 'புதிய' வரைவு பட்டியல்...
- 'தமிழகத்தில்' கொரோனாவுக்கு 'பலியானோர்' எண்ணிக்கை 11-ஆக உயர்வு!
- '24 மணி நேரமும் ஷிப்ட் போட்டு சவப்பெட்டி செய்றோம்...' 'சனி, ஞாயிறுல கூட லீவ் கிடையாது...' ஒரு நாளைக்கு எத்தனை பண்ணனும் தெரியுமா...? ஊழியர்கள் வேதனை...!
- ‘நின்றுப்போன கல்யாண சோகத்திலும்’... ‘முகூர்த்த நேரத்தில்’... ‘ஊரடங்கால் தவித்த இளம்பெண்ணுக்காக’... ‘இளைஞர் செய்த உணர்வுப்பூர்வமான காரியம்’!