மேல வாய்க்கால்.. கீழ சைக்கிள் சுரங்கமே இருக்கும் போலயே.. தூர்வாரும்போது அதிர்ந்த பணியாளர்கள்.. உலக வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நெதர்லாந்து நாட்டில் வாய்க்கால் ஒன்றை தூர்வார சென்ற அதிகாரிகள், அதனுள் கிடந்த பழைய சைக்கிள்களை அப்புறப்படுத்தியிருக்கின்றனர். நீர் நிரம்பிய வாய்க்காலில் இருந்து நூற்றுக்கணக்கான சைக்கிள்களை இயந்திரத்தின் துணையுடன் பணியாளர்கள் வெளியே எடுக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Advertising
>
Advertising

Also Read | பேட்டிங் பண்ண சொன்னா என்ன பண்ணிட்டு இருக்க.. கொந்தளித்த CSK வீரர்.. கிரவுண்ட்ல நடந்த களேபரம்.. வீடியோ..!

வட மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது நெதர்லாந்து. இதமான குளிரும், ஏராளமான இயற்கை வளங்களையும் கொண்ட இந்த நாட்டுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் சென்றுவருகின்றனர். இந்நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம். இங்கே 160க்கும் மேற்பட்ட வாய்க்கால்கள் இருக்கின்றன. இவற்றுள் பெரும்பாலானவை 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. இந்த வாய்க்கால்களில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சைக்கிள்களை மக்கள் வீசுகின்றனர். இதற்கான காரணம் தான் யாருக்கும் புரிவதே இல்லை. ஆம்ஸ்டர்டாமில் உள்ள கால்வாய்களில் 2 மில்லியன் சைக்கிள் வீசப்பட்டிருக்கலாம் என்கிறது அந்நாட்டு புள்ளி விபரங்கள்.

இந்நிலையில், சமீபத்தில் ஆம்ஸ்டர்டாம் நகர நிர்வாகம் இங்குள்ள வாய்க்காலை தூர்வார முடிவெடுத்திருக்கிறது. அதன்படி இயந்திரங்களுடன் துணையுடன் பணியாளர்கள் இந்த வேலையில் இறங்கியுள்ளனர். அப்போது அந்த வாய்க்காலுக்குள் மூழ்கியிருந்த  நூற்றுக்கணக்கான சைக்கிள்கள் வெளியே எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த வீடியோவை அதிகாரிகள் சமூக வலை தளத்தில் பதிவிட அது தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை கண்டு ஆச்சர்யப்பட்டுப்போன நெட்டிசன்கள் தங்களுடைய அனுபவம் குறித்தும் கமெண்ட் போட்டு வருகின்றனர். இந்த பதிவில் ஒருவர்,"சில வருடங்களுக்கு முன்னர் ஆம்ஸ்டர்டாம் நகரத்திற்கு சுற்றுலா சென்றிருந்தோம். அப்போது இந்த வாய்க்காலில் படகு சவாரி  செய்தோம். உடன் வந்திருந்த வழிகாட்டி ஒருவர் இந்த வாய்க்காலின் கீழே ஏராளமான சைக்கிள்கள் இருப்பதாக கூறினார். இப்போது அது உண்மைதான் என தோன்றுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இன்னொருவர் இந்த பதிவில்,"ஆம்ஸ்டர்டாமில் 160 க்கும் மேற்பட்ட கால்வாய்கள் உள்ளன. ஒவ்வொரு வருடமும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான சைக்கிள்கள் கால்வாய்களில் இருந்து மீட்கப்படுகின்றன" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவை இதுவரையில் 8 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

 

Also Read | கடையை இடிக்கும்போது கண்டுபிடிக்கப்பட்ட குழி.. தோண்டி பார்த்துட்டு உறைஞ்சு போன ஊழியர்கள். இதுக்கு மேலயா இவ்ளோ வருஷம் கடை இருந்துச்சு..!

BIKES, CANAL, AMSTERDAM, NETHERLANDS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்