உலகத்தின் குறைவான உயரம் கொண்ட இளைஞர்.. இவருக்கு இவ்ளோ வயசா..? கின்னஸ் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிகக்குறைவான உயரம் கொண்ட இளைஞராக நேபாளத்தைச் சேர்ந்த தோர் பகதூர் கபங்கி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Also Read | தொண்டையில் சிக்கிய இறைச்சி துண்டு.. மாணவிக்கு நேர்ந்த துயரம்..சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்..!
தோர் பகதூர் கபங்கி
நேபாள தலைநகர் காத்மாண்டுவை சேர்ந்தவர் தோர் பகதூர் கபங்கி. தற்போது 17 வயதாகும் இவர், உலகின் மிகக்குறைந்த உயரம் கொண்ட இளைஞராக கின்னஸ் நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2004 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி, பிறந்த இவருடைய தற்போதைய உயரம் 73.43 செமீ (2 அடி 4.9 அங்குலம்) ஆகும். பள்ளியில் படித்துவரும் தோர் பகதூர் கபங்கிக்கு கின்னஸ் நிர்வாகம் சான்றிதழ் அளித்திருப்பது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக கூறுகின்றனர் இவரது குடும்பத்தினர்.
வளர்ச்சி
2004 ஆம் ஆண்டு பிறந்த தோர் பகதூர் கபங்கியின் பெற்றோர் விவசாய வேலை பார்த்து வருகின்றனர். குடும்பத்தில் கடைசி குழந்தையாக பிறந்த தோர் ஆரம்பத்தில் ஆரோக்கியமாகவே இருந்திருக்கிறார். ஆனால், அவர் 7 வயதை எட்டிய பிறகு, அவருடைய வளர்ச்சி நின்றுவிட்டதாக கவலையுடன் குறிப்பிடுகின்றனர் அவரது குடும்பத்தினர். அதன்பிறகு பல்வேறு மருத்துவர்களை சந்தித்தும் பலன் கிடைக்கவில்லையென கூறும் குடும்பத்தினர், வெகுநாட்களுக்கு பிறகு தற்போது சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய தோர் பகதூர் கபங்கியின் மூத்த சகோதரர் நாரா பகதூர் கபங்கி," என் தம்பி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறது" என்றார்.
காத்மாண்டுவில் இருந்து தென்கிழக்கு பகுதியில் 130 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சிந்துளி மாவட்டத்தை சேர்ந்த தோர் பகதூர் கபங்கியின் குடும்பத்தார் இதுபற்றி பேசுகையில்," அருகில் உள்ள பள்ளியில் தோர் படித்துவருகிறார். தற்போது அவருக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் அவருடைய கல்விக்கு உதவும் என நம்புகிறோம்" என்றனர்.
முந்தைய சாதனை
இதற்கு முன்பாக, நேபாளத்தைச் சேர்ந்த கஜேந்திரா தபா மகர் என்பவரே உலகின் மிகக்குறைவான உயரம் கொண்ட இளைஞராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். 1992 ஆம் ஆண்டு பிறந்த மகர் 18 வயதாக இருந்த போது அவருடைய உயரம் 65.58 செமீ (2 அடி 1.8 அங்குலம்) இருந்ததையடுத்து கின்னஸ் நிர்வாகம் அவருக்கு சான்றிதழ் அளித்திருந்தது. அதன்பிறகு துரதிருஷ்டவசமாக 2020 ஆம் ஆண்டு மகர் மரணமடைந்த நிலையில் தற்போது உலகின் குறைவான உயரம் கொண்ட இளைஞராக தோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
மற்ற செய்திகள்