"இந்த மேட்டர்ல அவங்கள எதுக்கு இழுக்குறீங்க?".. 'அங்க சுத்தி இங்க சுத்தி' ட்விட்டர் CEO-விடமே 'வாங்கிக்' கட்டிக்கொண்ட 'டிரம்ப்'!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டரில் தவறான தகவல்களைத் தொடர்ந்து பதிவிட்டுள்ளதாக ட்விட்டர் தளம் புகார் தெரிவித்ததை அடுத்து டிரம்ப் இதனை எதிர்த்து எச்சரிக்கை விடுத்திருந்தார்.
முன்னதாக கொரோனா பாதிப்பு சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் வருவதால் மின்னஞ்சல் முறையில் வாக்கு செலுத்துதலைக் கடைபிடிக்க ஜனநாயக கட்சி வலியுறுத்தியது. இதற்கு அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்ததோடு, இந்த வாக்குப்பதிவு நடைமுறையினால் மோசடிகள் நடக்கும் என்றும் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து ட்விட்டர் தளத்தில் டிரம்ப் வெளியிட்ட இந்த பதிவு தவறானது என்று ட்விட்டர் தெரிவித்தது. இதற்கு மீண்டும் பதிலளித்த அதிபர் டிரம்ப், சமூக ஊடகங்கள் 2016 -ஆம் ஆண்டு நட்ந்த அதிபர் தேர்தலில் இருந்தே, தமது குரல்களை முடக்க பார்ப்பதாகவும் ஈமெயிலில் தேர்தல் நடந்தால் அதிக மோசடி செய்பவரே வெற்றி பெறுவார், அதேபோல் சமூக ஊடகங்களும் தற்போது செயல்படுகின்றன என்றும் இதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் எச்சரித்தார்.
இந்த நிலையில் இதற்கு பதிலடியாக, ட்விட்டர் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்ஸி கூறும்போது, “ட்விட்டர் தளத்தில் நடக்கும் அனைத்திற்கும் பொறுப்பாளியாக ஒருவர் இருக்கிறார் என்றால் அது நான்தான். ஆகவே இந்த பிரச்சனைகளில் எங்கள் ஊழியர்களை இழுக்க வேண்டாம். அமெரிக்கா மட்டுமல்ல, உலகம் முழுவதும் தேர்தல் குறித்த தவறான தகவல்கள் எங்கு வெளியானாலும் நாங்கள் அதை தொடர்ந்து சுட்டிக்காட்டி கொண்டே இருப்போம். நாங்கள் தவறு செய்தால் நீங்கள் சுட்டிக் காட்டுங்கள்” என்று பேசியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நாம 1 லட்சம் பேரை இழந்திருக்கிறோம்..!".. 'கல்லு மாதிரி இருந்த மனுசன்'!.. 'முதல்' முறையா 'கண்ணீருடன்' பதிவிட்ட 'ட்வீட்'!
- VIDEO: காட்டுப்பன்றிக்கு விரித்த வலையில் சிக்கிய ‘சிறுத்தை’.. பிடிக்கப்போன அதிகாரிகளை ‘அலறவிட்ட’ அதிர்ச்சி..!
- இந்த '5 மாநிலங்கள்ல' இருந்து... யாரும் 'எங்க' மாநிலத்துக்கு வராதீங்க... 'அதிரடி' உத்தரவு பிறப்பித்த அரசு!
- 'புளியந்தோப்பு டூ எட்டயபுரம்'... 600 கி.மீ பயணித்த 'கல்யாணப்'பெண்... ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் 'காத்திருந்த' பேரதிர்ச்சி!
- தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 12 பேர் கொரோனாவுக்கு பலி!.. அதிகம் பாதிக்கப்படுவது யார்?.. முழு விவரம் உள்ளே
- 'மாஸ்க் ஏன் போடலன்னு தானே கேட்டோம்'... 'உடனே ஜீன்ஸை கழட்டி இளம் பெண் செஞ்ச பகீர் செயல்'... 'ஆடிப்போன ஊழியர்கள்'... வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!
- 'அவங்க' சொல்றத எல்லாம் நம்பிட்டு... சும்மா சும்மா என் 'வழில' வராதீங்க... நம்மள கடுப்பேத்துறதே வேலையா போச்சு!
- 'அச்சத்துடன்' திரும்பி பார்க்கும் மான்... ஒளிஞ்சு இருக்கது 'யாருன்னு' கண்டுபுடிங்க?... களத்தில் 'குதித்த' நெட்டிசன்கள்!
- 'மெட்ரோ ரயில்கள் இனி இப்படித்தான் இயங்கும்!.. இதெல்லாம் நீங்க கண்டிப்பா பின்பற்றணும்'... புதிய வழிமுறைகள் என்ன?.. முழு விவரம் உள்ளே
- 'உலக சுகாதார மையமே சொல்லிடுச்சு!'.. 'பிரான்ஸை' தொடர்ந்து 'பெல்ஜியம், இத்தாலி' நாடுகள் 'அடுத்தடுத்து' எடுத்த அதிரடி 'முடிவு'!