"கார், டிவி எதுவும் இப்ப வாங்காதீங்க".. அமேசான் நிறுவனர் ஜெப் அடித்த எச்சரிக்கை மணி?!.. பரபரப்பு பின்னணி ..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் பொருளாதார சிக்கல்கள் எழுந்து வருவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. 

Advertising
>
Advertising

Also Read | நூறு நாள் வேலை பாத்துக்கிட்டே குரூப் 2 தேர்வில் சாதிச்ச 55 வயது "பார்வை மாற்றுத்திறனாளி".. குவியும் பாராட்டுகள்.

கொரோனா பேரிடருக்கு பிறகான காலகட்டத்தில் பல நாடுகள் நிதி நெருக்கடி தொடர்பான பிரச்சனைகளையும் சந்தித்து வருவதால் மக்களும் சற்று அவதிப்பட்டு வருகிறார்கள்.

அதே போல, ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வருவதும் பல உலக நாடுகளின் பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணமாகவும் உள்ளது. சர்வதேச நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, பெரிய அளவில் அச்சுறுத்தவும் செய்து வருகிறது. மேலும் அடுத்தடுத்து பெரிய அளவில் இந்த விஷயம் தாக்கத்தை உண்டு பண்ணுமா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் உருவாகி உள்ளது.

அப்படி ஒரு சூழலில், உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் எச்சரித்ததாக நடிகை மஞ்சிமா மோகன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள விஷயம், அதிக பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ஆங்கில டிவி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "அமெரிக்கா பொருளாதார மந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனவே யாரும் அநாயாவசியமாக செலவு செய்யாதீர்கள். பெரிய டிவி வாங்க நினைத்தால் அந்த முடிவை தள்ளி போடுங்கள். புதிய வாகனம், கார், ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை வாங்க பெரிய செலவுகளை தள்ளி போடுங்கள். அந்த பணத்தை மிச்சப்படுத்தி வையுங்கள். சிறு தொழில் முனைவோர்கள் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. இப்போது எல்லா துறையிலும் மந்த நிலை நீடிக்கிறது. பொருளாதாரத்தின் பல துறைகளில் பணி நீக்கங்களை நீங்கள் காண்கிறீர்கள்" என தெரிவித்ததாக மஞ்சிமா மோகனின் இன்ஸ்டா ஸ்டோரி குறிப்பிடுகிறது.

அமேசான் போன்ற ஒரு பெரிய நிறுவனத்தின் உரிமையாளர் இப்படி பொருட்களை அதிகம் வாங்காமல், பணத்தை சேமித்து வைக்குமாறு கருத்து தெரிவித்துள்ளார்.

Also Read | ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் 48 கார்கள் விபத்து.! புனே - பெங்களூரு நெடுஞ்சாலையில் பரபரப்பு..! Pune Navle bridge Accident

AMAZON, JEFF BEZOS, AMAZON JEFF BEZOS, DONT BUY TV FRIDGES SAYS JEFF BEZOS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்